Bigg Boss Tamil 7: கடந்த வாரம் நிக்சன் கிரேட் எஸ்கேப்.. இந்த வாரம் எலிமினேஷன் இவர் தானா? பாவம்!

சென்னை: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி வெற்றிகரமாக 72வது நாளை கடந்துள்ளது. கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் எலிமினேஷன் கிடையாது என்றும் மிக்ஜாம் புயல் காரணமாக மக்கள் ஓட்டுப் போடவில்லை என பிக் பாஸ் டீம் அறிவித்ததை உலக மகா உருட்டு என பிக் பாஸ் ரசிகர்கள் ட்ரோல் செய்தனர்.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எலிமினேஷன் இருந்திருந்தால் நிக்சன் தான் வெளியே போயிருப்பார் என்றும் கருத்துக் கணிப்புகள் வெளியாகின. ஆனால், இந்த வாரம் அவர் நாமினேட் செய்யப்பட்டாலும் எவிக்ட் ஆக மாட்டார் என்றே தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

This Week Ananya Rao expected to eliminate from Bigg Boss Tamil 7

இந்த வாரம் சிக்கியவர்கள்: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் பழைய துணிகளை அடுக்கி நாமினேஷன் செய்யும் டாஸ்க் கொடுக்கப்பட்டது. இந்த வாரமும் மாயா, பூர்ணிமா, மணி, ரவீனா தாஹா, விக்ரம், விசித்ரா, விஜய் வர்மா உள்ளிட்டவர்கள் கிரேட் எஸ்கேப். நாமினேட் ஆனவர்கள் யாரென்று பார்த்தால் நிக்சன், கூல் சுரேஷ், விஷ்ணு, அர்ச்சனா, அனன்யா ராவ் மற்றும் தினேஷ் உள்ளிட்ட போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டனர்.

அர்ச்சனாவுக்கு அதிக ஓட்டுகள்: இந்த வாரமும் அர்ச்சனா நாமினேட் செய்யப்பட்ட நிலையில், இதுவரை அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருப்பதாக கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அர்ச்சனாவை தொடர்ந்து தினேஷ் அடுத்த இடத்தில் உள்ளார் என்றும் அவரை தொடர்ந்து விஷ்ணு மற்றும் நிக்சன் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டேஞ்சர் ஜோன்: இந்நிலையில், இந்த வாரம் குறைவான ஓட்டுக்களுடன் டேஞ்சர் ஜோனில் இருவர் உள்ளனர். அனன்யா மற்றும் கூல் சுரேஷ் உள்ளனர். ஏற்கனவே அனன்யா ராவ் எவிக்ட் ஆகி மீண்டும் வைல்டு கார்டு என்ட்ரியாக சமீபத்தில் தான் உள்ளே வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனன்யா தான் வெளியேற்றம்: இந்நிலையில், இந்த வாரம் கூல் சுரேஷ் வெளியேறுவாரா? அல்லது அனன்யா வெளியேறுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. நிக்சன் தப்பித்த நிலையில், இந்த இருவரும் சிக்கிக் கொண்டனர். இதில், தற்போது வரை மிகவும் குறைவான ஓட்டுக்களுடன் அனன்யா தான் கடைசி இடத்தில் உள்ளார் என்பதால் அவர் தான் இந்த வாரம் வெளியேறுவார் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X