பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு முக்கோண காதல்.. இந்த வாரம் முழுக்க இதையே வச்சு ஓட்டப்போறாரு பிக்பாஸ்!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் மீண்டும் ஒரு முக்கோண காதல் வலம் வரபோவதாக தெரிகிறது.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆண் போட்டியாளர்களில் கவினை தவிர மற்ற அனைவரும் ஒரளவுக்கு டீசன்ட்டாகதான் விளையாடி வருகிறார்கள். ஆனால் பெண் போட்டியாளர்களில் சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகிய மூன்று பேருமே மிக மோசமான நடத்தையை வெளிப்படுத்தினர்.
அவர்கள் மூன்று பேருக்குள்ளும் யார் பிக்பாஸ் வீட்டிற்குள் ஒருவரை மடக்கி காதலில் வெற்றி பெறுவது என்பதுதான் போட்டி. இதற்கு பெண்களில் முதன் முதலில் பிள்ளையார் சுழி போட்டவர் அபிராமி.

4 பேரையும் ஓட்டிய கவின்
பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணிநேரத்திற்குள் கவின் மீது அவருக்கு காதல் வந்துவிட்டது. அவருக்கு அடுத்தப்படியாக கவின், அபிராமி, சாக்ஷி, லாஸ்லியா, ஷெரின் என 4 பேரையும் ஒன்றாக ஓட்டினார்.

கடுமையான போட்டி
நான்கு பேரையும் ஒரே நேரத்தில் காதலித்தால் பிரச்சனை வராது என்று தப்புக் கணக்கு போட்டு நான்கு பேரையும் காதலித்தார். இதில் ஷெரின் ஒதுங்கிக்கொள்ள, கவினை காதலிப்பதில் சாக்ஷிக்கும் அபிராமிக்கும் கடுமையான போட்டி ஏற்பட்டது.

கர்மா இஸ் பூமராங்
சாக்ஷிக்காக தனது காதலை விட்டுக்கொடுத்த அபிராமி. இதைத்தொடர்ந்து சாக்ஷியும் கவினும் ஒருவருக்கொருவர் காதலை பரிமாறி காதல் வானில் சிறகடித்து பறந்தனர். இந்நிலையில் கர்மா இஸ் பூமராங் என்பது லாஸ்லியா ரூபத்தில் வந்தது.

கழட்டிவிட்ட கவின்
கவின் மீது காதல் கொண்டார் லாஸ்லியா. கவினுக்கு லாஸ்லியா மீதும் காதல். இதனால் கடுப்பான சாக்ஷி கவினிடம் சண்டைபோட்டார். இதனை விரும்பாத கவின், சாக்ஷியை கழட்டிவிட நேரம் பார்த்தார். நல்ல நேரத்தில் காதலை முறித்துக் கொண்டார்.

மீண்டும் ஒரு முக்கோண காதல்
ஆனாலும் இந்த முக்கோண காதல் கதைதான் கடந்த வாரம் முழுக்க ஓடியது. இதனால் வெறுப்பானார்கள் பார்வையாளர்கள். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் தற்போது மீண்டும் ஒரு முக்கோண காதல் உருவாகியுள்ளது.

முகென் காதலிக்கவில்லை
அதாவது கவினை சாக்ஷிக்காக விட்டுக்கொடுத்த அபிராமி முகெனை காதலிக்க தொடங்கினார். ஆனால் முகென் அபிராமியை காதலிக்கவில்லை. நம்மிடையே இருப்பது நட்பு மட்டுமே என அபிராமியிடம் அவ்வப்போது கூறி நினைவுபடுத்தி வந்தார்.

முகென் மூலம் மருந்து
இருப்பினும் முகெனை ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருக்கிறார் அபிராமி. இந்நிலையில் தற்போது கவினுடனான காதல் முறிந்த நிலையில் காதல் தோல்வியில் உள்ள சாக்ஷி, புண்பட்ட மனதுக்கு முகென் மூலம் மருந்து தேட முயற்சிக்கிறார்.

இந்த வாரம் முக்கோண் காதல்
இதானல் முகெனுடன் நெருக்கம் காட்டுகிறார் சாக்ஷி. ஆனால் அந்த நெருக்கம் அபிராமிக்கு பிடிக்கவில்லை. இதனால் சாக்ஷியுடன் சண்டை போடுகிறார். ஆக கடந்த வாரம் முழுக்க சாக்ஷி, கவின், லாஸ்லியா ஆகியோரின் முக்கோண காதல் கதையை வைத்து ஓட்டிய பிக்பாஸ், வரும் வாரங்களில் சாக்ஷி, முகேன், அபிராமி ஆகியோரின் முக்கோண காதல் கதையை வைத்து ஓட்டி விடுவார் போல.

நல்லா பண்றீங்கய்யா
எப்படியோ பிக்பாஸ் வீட்டில் நீடிக்க காதல் என்ற ஆயுதம் அவசியம் என்பதை மட்டும் சாக்ஷி, அபிராமி, லாஸ்லியா ஆகியோர் நன்றாக புரிந்து வைத்துள்ளனர். நல்லா பண்றீங்கய்யா! இதுவரை கவினை வைத்த அனுதாபம் தேடி வந்த சாக்ஷி இனி வரும் நாட்களில் அபிராமியை வைத்து அனுதாபம் தேடப்போகிறார் என்பது மட்டும் தெரிகிறது!


Click it and Unblock the Notifications











