இந்த வார டாப் 10 சீரியல்கள்: முதல் 5 இடங்களை 'பச்சக்' என பிடித்த சன் டிவி.. கீழிறங்கிய விஜய் டிவி!

சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு சீரியல்களையும் நிகழ்ச்சிகளையும் அடுத்தடுத்து ரசிகர்களுக்கு கொடுத்து வருகின்றன. அந்த வகையில் வாரம் தோறும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து சீரியல்களின் தரவரிசை அமைகிறது. இந்த வாரம் முதல் ஐந்து இடங்களில் சன் டிவியின் சீரியல்கள் இடம் பெற்றுள்ளன.

தொடர்ந்து முதல் 5 இடங்களில் இடம் பெற்று வந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது ஆறாவது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. இதே போல விஜய் டிவியின் இரண்டாவது முன்னணி சீரியலாக இருந்த பாக்கியலட்சுமி தொடரை பின்னுக்கு தள்ளி பாண்டியன் ஸ்டோர் சீரியல் முன்னேறி உள்ளது.

Television top 10 serials Sun tv

இந்த வார டாப் 10 சீரியல்கள்: சீரியல்கள் நிகழ்ச்சிகள் என எதை எடுத்தாலும் சன் டிவிக்கும் விஜய் டிவிக்கும் போட்டி அதிகமாகவே காணப்படுகிறது. வாரந்தோறும் டிஆர்பி ரேட்டிங்கில் சீரியல்களின் தரவரிசை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் எப்போதுமே சன் டிவி சீரியல்கள் இந்த வரிசையில் முக்கியமான மற்றும் முன்னணி இடங்களை பிடித்து விடுகின்றன. இந்த வாரமும் சீரியல்களின் தரவரிசை பட்டியல் டிஆர்பி அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள நிலையை முதல் ஐந்து இடங்களை சன் டிவி சீரியல்களே பிடித்துள்ளன. முதல் ஐந்து இடங்களில் கடந்த வாரங்களில் இடம்பெற்று இருந்த விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

40வது வார டிஆர்பி பட்டியல்: இந்த ஆண்டில் 40வது டிஆர்பி பட்டியல் தற்போது வெளியாகியுள்ள நிலையில் முதல் இடத்தை சன் டிவியின் கயல் சீரியல் பிடித்துள்ளது. கடந்த 3 வாரங்களாக கயல் மற்றும் எழில் திருமணத்தையொட்டி இந்த சீரியல் பரபரப்பான எபிசோட்களை கொடுத்துவரும் நிலையில், இந்த சீரியல் தற்போது 9.59 டிஆர்பி புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சன் டிவியின் சிங்கப் பெண்ணே சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்திற்கு தாவியுள்ளது. இந்த சீரியலிலும் சூர்யா -நந்தினி திருமணம் குறித்த எபிசோட்கள் தொடர்ந்து வருகின்றன. இந்த சீரியல் 8.35 டிஆர்பி ரேட்டிங்கை பெற்றுள்ளது.

முதல் 5 இடங்களில் சன் டிவி சீரியல்கள்: கடந்த சில வாரங்களுக்கு முன்பு முதலிடத்தில் இருந்த சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது தன்னுடைய தோழிக்காக ஹாஸ்டல் சுவரேறி குதித்து வார்டனிடம் சிக்கியுள்ளார் ஆனந்தி. அவரது நிலை என்னவாகும் என்பதாக இந்த சீரியலின் கதைக்களம் காணப்படுகிறது. இந்த சீரியல் இந்த வாரம் பிடித்துள்ள டிஆர்பி ரேட்டிங் 8.26. இதையடுத்து இதையடுத்து நான்காவது இடத்தில் சன் டிவியின் மருமகள் தொடர் உள்ளது. இந்த சீரியல் தற்போது 7.98 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது. 5வது இடத்தில் சுந்தரி சீரியல் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்த சீரியலின் டிஆர்பி ரேட்டிங் 7.85 புள்ளிகள்.

Television top 10 serials Sun tv

6வது இடத்தில் சிறகடிக்க ஆசை : இதனிடையே விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.76 புள்ளிகளுடன் 6வது இடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களாக முதல் 5 இடங்களில் இடம்பெற்ற இந்த சீரியல் தற்போது கீழிறங்கியுள்ளது. இந்த சீரியலில் தன்னுடைய மைத்துனன் சத்யாமீது கோபத்தில் இருந்த முத்து, அவரது கல்லூரி பிரச்சினையில் போலீசாரால் கைது செய்யப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளார். இதையடுத்து இந்த சீரியலில் என்ன நடக்கும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இதையடுத்து 7வது இடத்தில் சன் டிவியின் டப்பிங் ஆன்மீக தொடரான ராமாயணம் 6.89 டிஆர்பி புள்ளிகளுடடன் காணப்படுகிறது.

முன்னேறிய பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: 8வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம்பெற்றுள்ளது. விஜய் டிவியின் இரண்டாவது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு இந்த சீரியல் 6.74 டிஆர்பி புள்ளிகளுடன் தற்போது 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதையடுத்து இந்த வார டாப் 10 சீரியல்களில் 9வது இடத்தில் மல்லி சீரியல் 6.58 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது 5.99 டிஆர்பி புள்ளிகளுடன் 10வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. கடந்த ஒரு மாத காலமாகவே இந்த சீரியல் தொடர்ந்து சரிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X