Top 10 serials: இந்த வார டாப் 10 சீரியல்கள்.. முதல் 5 & கடைசி 5.. அட இப்படியொரு போட்டியா!

சென்னை: திரைப்படங்களுக்கு இணையாக சின்னத்திரையும் தொடர்ந்து மாஸ் காட்டி வருகின்றன. சின்னத்திரையிலும் நிகழ்ச்சிகள், சீரியல்கள், பேட்டிகள் என அடுத்தடுத்து சேனல்கள் போட்டிப் போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. குறிப்பாக நிகழ்ச்சிகளுக்கு இணையான சமயங்களில் அதிகமான கவனத்தை சீரியல்கள் பெற்று வருகின்றன.

ரசிகர்களை கவரும்வகையில் அடுத்தடுத்த சீரியல்களை ஒவ்வொரு சேனல்களும்போட்டிப் போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. இவற்றில் ஒவ்வொரு வாரமும் எந்த சீரியல்கள் டாப் இடங்களை பிடிக்கின்றன என்பதை டிஆர்பி அடிப்படையில் பட்டியலிடப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதி மாதங்களில் நாம் உள்ள நிலையில் இந்த வாரம் டாப் இடங்களை பிடித்த சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

top 10 serials sun tv vijay tv 10

டாப் 10 சீரியல்கள்: தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளுக்கு இணையான வரவேற்பை சீரியல்களும் பெற்று வருகின்றன. அந்த வகையில் வாரந்தோறும் சீரியல்களின் வரவேற்பு குறித்தும் டிஆர்பி அடிப்படையில் பட்டியல் வெளியாகி வருகின்றன. இந்த ஆண்டின் இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில் இந்த ஆண்டின் 47வது வாரத்திற்கான டாப் சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் முதல் 5 இடங்களை சன் டிவியின் சீரியல்கள் பிடித்துள்ளன. இதனிடையே அடுத்த 5 இடங்களை விஜய் டிவியின் சீரியல்கள் பிடித்துள்ளன. முன்னதாக டாப் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களே மீண்டும் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளன. ஆயினும் இவற்றில் மாற்றங்களும் காணப்படுகின்றன.

முதல் 5 இடங்களில் சன் டிவி சீரியல்கள்: சன் டிவியின் கயல் சீரியல் இந்த வாரமும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. கடந்த சில வாரங்களாக இந்த சீரியல் தரவரிசையில் பின்தங்கியிருந்த நிலையில், தற்போது மீண்டும் முதலிடத்தில் உள்ளது. 10.34 டிஆர்பி புள்ளிகளுடன் இந்த சீரியல் இந்த வாரம் முதலிடத்தில் உள்ளது. தொடர்ந்து அதிரடியான திருப்பங்களுடன்இந்த சீரியல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதனிடையே இரண்டாவது இடத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் 10.03 புள்ளிகளுடன் உள்ளது. இந்த சீரியலில் நாயகியின் அடுத்தடுத்த சுவாரஸ்யமான நடவடிககைகள் சீரியலுக்கு ரசிகர்களிடையே அதிகமான வரவேற்பை பெற்றுக் கொடுத்து வருகிறது.

47வது வார டிஆர்பி பட்டியல்: இந்த 47வது வாரத்தில் 9.95 டிஆர்பியுடன் 8வது இடத்தை ஆக்கிரமித்துள்ளது மூன்று முடிச்சு சீரியல். இந்தத் தொடரும் பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் உள்ள நிலையில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் சீரியலை கொண்டாடி வருகின்றனர். இதையடுத்து 4வது இடத்தில் சன் டிவியின் இரண்டு சீரியல்கள் 8.89 புள்ளிகளுடன் உள்ளன. மருமகள் மற்றும் ராமாயணம் தொடாகள்தான் அவை. இவற்றில் ராமாயணம் தொடர் இந்தியிலிருந்து டப்பிங் செய்யப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதனிடையே 5வது இடத்தில் சன் டிவியின் சுந்தரி சீரியல் இடம்பெற்றுள்ளது. இந்தத் தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் இந்த சீரியல் பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் 8.81.

டாப் 10 பட்டியலில் விஜய் டிவி: முதல் 5 இடங்களை சன் டிவி சீரியல்கள் வழக்கம்போல பிடித்துள்ள நிலையில், அடுத்தடுத்த சன்டிவி சீரியல்கள் மற்றும் ஜீ தமிழ் சீரியல்களை பின்னுக்குத் தள்ளி விஜய் டிவி சீரியல்கள் முதல் 10 இடங்களை பிடித்துள்ளன. 6வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 7.64 டிஆர்பி புள்ளிகளுடன் உள்ளது. இதையடுத்து அந்த சேனலின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.43 டிஆர்பியுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து முன்னணியில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் இந்த வாரத்தில் சிறப்பாக முன்னேற்றத்தை காட்டியுள்ளது. 8வது இடத்தில் உள்ள இந்த சீரியல் பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் 6.22.

விஜய் டிவி அதிரடி முன்னேற்றம்: இதையடுத்து 9வது மற்றும் 10வது இடங்களையும் விஜய் டிவி சீரியல்களே பெற்றுள்ளன. சின்ன மருமகள் சீரியல் 6.02 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் ஆஹா கல்யாணம் சீரியல் 5.98 டிஆர்பியுடன் 10வது இடத்திலும் உள்ளது. இந்த வாரத்தில் டிஆர்பியில் அதிகமான மாற்றங்கள் காணப்படும் நிலையில் அடுத்த வாரத்தில் இந்த சீரியல்கள் பெறப்போகும் இடங்கள் என்ன என்பதை அறியவும் ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X