இந்த வாரமும் சன்டிவி சீரியல்கள்தான் மாஸ்.. டிஆர்பியில் முன்னேறிய பாக்கியலட்சுமி சீரியல்!

சென்னை: ஒவ்வொரு வாரமும் சீரியல்களை அடிப்படையாகக் கொண்டு டிஆர்பி புள்ளிகள் வழங்கப்பட்டு எந்த சீரியல் முதலிடத்தை பிடித்துள்ளது என்ற பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் 51வது வாரமான இந்த வாரத்தின் டிஆர்பி புள்ளிகள் வெளியாகி உள்ளன. இந்த பட்டியலில் வழக்கம் போல சன் டிவி சீரியல்கள் முதல் ஐந்து இடங்களை விட்டுக் கொடுக்காமல் உள்ளன.

அடுத்தடுத்த இடங்களில் மட்டுமே விஜய் டிவி சீரியல்களுக்கு இடம் கிடைத்துள்ளது. அந்த வகையில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளன. கடந்த வாரத்தில் மூன்றாவது இடத்தில் இருந்த விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலை பின்னுக்கு தள்ளி சேனலின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இதன் டிஆர்பி புள்ளிகளும் கணிசமாக உயர்ந்துள்ளன.

this week serials trp rating television


இந்த வார டாப் சீரியல்கள்: சின்னத்திரையில் நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களும் மாஸ் காட்டி வரும் சூழலில் ஒவ்வொரு சேனலும் வித்தியாசமான மற்றும் ரசிகர்களை கவரும் வகையிலான அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கி வருகின்றன. ஒரு சீரியல் தொடர்ந்து சில வாரங்கள் கவனத்தை ஈர்க்காவிட்டால் அந்த சீரியலை தட்டி தூக்குவதிலும் சிறிதும் பாரபட்சம் காட்டுவதில்லை. அந்த வகையில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என அடுத்தடுத்த சேனல்கள் இதில் போட்டியிட்டு வருகின்றன. ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்களின் வரவேற்பை பொறுத்து டிஆர்பி புள்ளிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மாஸ் காட்டும் சன் டிவி சீரியல்கள்: அந்த வகையில் இந்த டிஆர்பி புள்ளிகளில் தொடர்ந்து சன் டிவி சீரியல்களே மாஸ் காட்டி வருகின்றன. இரண்டாவது இடத்தில் விஜய் டிவி சீரியல்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டின் இறுதி கட்டத்தில் நாம் உள்ளோம். இந்த ஆண்டின் 51வது வாரத்தின் டிஆர்பி புள்ளிகள் தற்போது வெளியாகி உள்ளன. அந்த வகையில் முதல் 6 இடங்களை சன் டிவி சீரியல்கள் பெற்றுள்ளன. விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் ஏழாவது இடத்தில் உள்ள நிலையில் அடுத்ததாக பாக்கியலட்சுமி சீரியலும் அதையடுத்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலும் இடம்பெற்றுள்ளன.

முன்னேறிய பாக்கியலட்சுமி சீரியல்: கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிடம் போட்டியிட முடியாமல் சேனலின் மூன்றாவது இடத்தில் இருந்த பாக்கியலட்சுமி சீரியல், இந்த வாரத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து இந்த சீரியல் இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். இந்த வார டிஆர்பி பட்டியலில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் முதலிடத்தில் உள்ளது. இந்த சீரியலுக்கு 10.03 புள்ளிகள் கிடைத்துள்ளன. இரண்டாவது இடத்தில் மூன்று முடிச்சு சீரியல் 9.92 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. மூன்றாவது இடத்தில் சன் டிவியின் கயல் சீரியல் 9.80 புள்ளிகளுடன் உள்ளது.

முதல் 6 இடங்களில் சன் டிவி சீரியல்கள்: 4வது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் 9.13 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. 5வது இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் 8.78 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. புராண இதிகாசங்களையும் ரசிகர்கள் ரசித்து பார்ப்பதற்கு இதுவே சான்றாக உள்ளது. இந்த சீரியலுக்கு 8.78 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து 6வது இடத்தில் அன்னம் சீரியல் 8.60 புள்ளிகளுடன் உள்ளது. 7வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் 8.25 புள்ளிகளுடன் உள்ளது. இதையடுத்து விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 8வது இடத்தில் 6.69 புள்ளிகளுடன் உள்ளது. தொடர்ந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.52 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் சன் டிவியின் ரஞ்சனி சீரியல் 6.05 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X