top 10 serials: முதலிடத்திற்கு தாவிய சன் டிவி சீரியல்.. அட விஜய் டிவி சீரியலும் முன்னாடி வந்துடுச்சே
சென்னை: சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்கள் அடுத்தடுத்து சீரியல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஒளிபரப்பு செய்து வருகின்றன. இதில் முதல் 10 இடங்களில் சன் டிவி சீரியல்கள் அதிகமான இடங்களை பிடித்து வருகின்றன. இதுதான் வாரந்தோறும் இருக்கும் நடைமுறை. ஆயினும் விஜய் டிவி சீரியல்கள் டாப் 10 இடங்களில் இடம்பிடித்து வருகின்றன.
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்கள் முன்னணியில் உள்ள நிலையில் இந்த ஆண்டின் ஏழாவது வாரத்தின் முதல் 10 இடங்களை பிடித்த சீரியல்களின் வரிசையை பார்க்கலாம். கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் இந்த வாரமும் அதிகமான மாற்றங்கள் காணப்படுகின்றன.

இந்த வார டாப் 10 சீரியல்கள்: இந்த ஆண்டு தற்போது தான் துவங்கியது போல உள்ளது. ஆனால் அதற்குள்ளாகவே ஏழாவது வாரத்தில் உள்ளோம், இந்த ஏழாவது வாரத்தில் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களின் டிஆர்பி ரேட்டிங் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கேற்ப சீரியல்களின் தரவரிசையும் வெளியாகியுள்ளது. கிராமத்து மற்றும் நகர்புற ரசிகர்களின் ரசனைக்கேற்ப இந்த லிஸ்ட் வெளியாகியுள்ளது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களின் சீரியல்கள் இடையில் அதிகமான போட்டி நிலவி வருகிறது. ஆயினும் சீரியல்களை பொருத்தவரையில் சன்டிவி தான் எப்போதுமே டாப்.
டாப் இடங்களில் சன் டிவி சீரியல்கள்: கடந்த வாரத்தில் சன் டிவி டாப் 5 இடங்களை பிடித்த நிலையில் தற்போது விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை உள்ளிட்ட சீரியல்கள் டாப் 10 வரிசையில் இடம் பெற்றுள்ளன. கடந்த வாரத்தில் முதலிடத்தை பிடித்திருந்த சிங்கப்பெண்ணே சீரியல் தற்போது பின்னடைவை சந்தித்துள்ளது. இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. முதலிடத்தில் அதிகமான டிஆர்பி புள்ளிகளை பெற்று மூன்று முடிச்சு சீரியல் முன்னேறியுள்ளது. இதேபோல முன்னணி இடத்தை பிடித்திருந்த சன்டிவியின் ராமாயணம் புராணத் தொடர் இந்த வாரம் பின்தங்கி 10வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. இந்த வார டாப் 10 சீரியல்களின் வரிசையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
முன்னேறிய சிறகடிக்க ஆசை சீரியல்: கடந்த வாரத்தில் டாப் 5 இடங்களை சன் டிவி சீரியல்கள் பிடித்திருந்தன. இந்நிலையில் 4வது இடத்தில் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியல் முன்னேறியுள்ளது. முதலிடத்தில் 9.22 புள்ளிகளை பெற்று சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் உள்ளது. இதனிடையே கடந்த வாரத்தில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருந்த சிங்கப் பெண்ணே சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு பின்தங்கியுள்ளது. இந்த சீரியல் பெற்றுள்ள புள்ளிகள் 9.21. அடுத்த இடத்திலும் சன்டிவியின் சீரியலே இடம்பெற்றுள்ளது. ரசிகர்களின் அதிகமான விருப்பத்தை பெற்றுவரும் கயல் சீரியல் இந்த வாரம் 9.14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.
அடுத்தடுத்த இடங்களில் சன் டிவி: கடந்த வாரத்தில் டாப் 5 இடங்களில் இடம்பெறாத சிறகடிக்க ஆசை தொடர் இந்த வாரத்தில் 8.25 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது. இந்த சீரியலில் சுந்தர்ராஜன், வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியாவின் நடிப்பு அதிகமான ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த சீரியலை தொடர்ந்து 5வது இடத்தில் சன் டிவியின் மருமகள் சீரியல் 8.15 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது.சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய பயணத்தை துவங்கினாலும் இந்த சீரியல் தொடர்ந்து டாப் இடத்தை பிடித்து வருகிறது. இதனிடையே 6வது இடத்திலும் சன் டிவியின் சீரியல்தான் உள்ளது. சன் டிவியின் அன்னம் சீரியல் 7.33 புள்ளிகளுடன் இந்த இடத்தில் உள்ளது.
கீழிறங்கிய ராமாயணம் தொடர்: இதையடுத்து சன் டிவியின் எதிர்நீச்சல் 2 சீரியல் 7.01 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இந்த சீரியல் துவங்கப்பட்டது. இருந்தபோதிலும் சீரியல் துவக்கத்திலிருந்தே டாப் 10 இடத்தை பிடித்து வருகிறது. இதன் முதல் சீசன் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டது. அடுத்தடுத்த வாரங்களில் இந்த சீரியல் மேலும் அதிக டிஆர்பி புள்ளிகளை பெறும் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே 6.63 புள்ளிகளுடன் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 8வது இடத்தை பிடித்துள்ளது. தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியல் 6.52 புள்ளிகளுடன் 9வது இடத்திலும் சன் டிவியின் ராமாயணம் சீரியல் 6.31 புள்ளிகளுடன் 10வது இடத்திலும் இடம்பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











