Top 10 serials: இந்த வார டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்.. உங்களோட ஃபேவரைட் சீரியல் இருக்கான்னு பாருங்க!

சென்னை: தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளுக்கு இணையாக சீரியல்களும் கவனம் பெற்று வருகிறது. அந்த வகையில் இவற்றில் மக்களால் அதிகமாக பார்க்கப்படும் சீரியல்கள் டிஆர்பி அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் வகைப்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த வார டாப் 10 சீரியல்கள் குறித்து பார்க்கலாம்.

இந்த சீரியல்கள் அனைத்தும் சினிமாவிற்கு இணையாக எடுக்கப்பட்டு வருகின்றன. சின்னத்திரை மூலம் சினிமாவிற்கு சென்ற பலரும் மிகப்பெரிய வெற்றியை பெற்று வருகின்றனர். இதன் காரணமாகவும் சின்னத்திரை மிகப்பெரிய அளவில் சாதிக்கத் துடிப்பவர்களுக்கு களங்களாக அமைந்து வருகின்றன.

television top 10 serials sun tv

டாப் 10 சீரியல்கள்: ஒவ்வொரு சேனலிலும் நிகழ்ச்சிகளுக்கு இணையாகவோ அல்லது அதையும் தாண்டியோ சீரியல்கள் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகின்றன. இவை ஒவ்வொரு வாரமும் டிஆர்பி அடிப்படையில் முன்னிலைப் படுத்தப்படுகின்றன. அந்த வகையில் இந்த வாரமும் சீரியல்கள் அதன் டிஆர்பி ரேட்டிங் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல சினிமாவிற்கு இணையாக சீரியல்களும் எடுக்கப்பட்டு கவனம் பெற்று வருகின்றன. அந்த வகையில் பாட்டு, டான்ஸ், அதிரடி சண்டைகள் என சீரியல்களிலும் பார்க்க முடிகிறது. இதனால் சீரியல்களை ஆண்களும் பார்க்க துவங்கியுள்ளனர்.

முதலிடத்தில் கயல் சீரியல்: அந்த வகையில் தற்காலங்களில் சீரியல்களின் டிஆர்பி புள்ளிகள் அதிகரித்து வருகின்றன. இவற்றில் சன் டிவி சீரியல்கள் அதிக கவனம் பெற்று வருகின்றன. கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் கயல் சீரியல் முதலிடத்தில் உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் சைத்ரா ரெட்டி, சஞ்சீவ் கார்த்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் 11.08 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளது. இரண்டாவது இடத்திலும் சன்டிவியில் தொடரே காணப்படுகிறது. 9,7 புள்ளிகளுடன் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் இரண்டாவது இடத்தில் உள்ளது.

மீண்டும் பின்தங்கிய சிங்கப்பெண்ணே: இந்த சீரியலில் ஸ்வாதி கொண்டே, நியாஸ் கான் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதையடுத்து மூன்றாவது இடத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. இந்த சீரியல் இடையில் சில வாரங்கள் முதலிடத்தில் இருந்தநிலையில் தற்போது மூன்றாவது இடத்திற்கு சென்றுள்ளது. மனீஷா மகேஷ், அமல்ஜித் ஆகியோர் இந்த சீரியலின் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இங்த சீரியல் 9.17 புள்ளிகளை பெற்றுள்ளது. இதையடுத்து 4வது இடத்திலும் சன் டிவியின் மருமகள் தொடரே இடம் பெற்றுள்ளது. கேப்ரியல்லா சார்ல்டன், ராகுல் ரவி ஆகியோர் இந்த சீரியலில் முதன்மை கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இந்த சீரியல் பெற்றுள்ள டிஆர்பி புள்ளிகள் 8.97.

முதல் 6 இடங்களில் சன் டிவி: இதையடுத்து ஐந்தாவது இடத்திலும் சன் டிவியின் சுந்தரி சீரியல் இடம் பெற்றுள்ளது. கேப்ரியல்லா, ஜிஸ்ணு மேனன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் இந்த சீரியலின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் இந்த வாரத்தில் பெற்றுள்ள புள்ளிகள் 8.29. இதையடுத்தும் சன் டிவியின் ராமாயணம் தொடர் அதிக டிஆர்பியுடன் 6வது இடத்தில் இடம்பெற்றுள்ளது. தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பாகிவரும் இந்த சீரியல் இந்த வாரம் பெற்றுள்ள புள்ளிகள் 8.29. முதல் 6 இடங்களில் சன் டிவியின் சீரியல்களே அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.

முதல் 10 லிஸ்ட்டில் சின்ன மருமகள்: இதையடுத்து 7வது இடத்தில்தான் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை தொடர் இடம்பெற முடிந்துள்ளது. இந்த சீரியல் குடும்ப உறவுகளின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில் அமைந்து வருகிறது. இந்த சீரியல் 7.02 புள்ளிகளுடன் 7வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுத்து 8வது இடத்தில் மீண்டும் சன் டிவியின் மல்லி தொடர் 6.71 புள்ளிகளுடன் இடம்பெற்றுள்ளது. 9வது இடத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இடம்பெற்றுள்ளது. தொடர்ந்து 10வது இடத்தில் விஜய் டிவியின் சின்ன மருமகள் தொடர் 5.54 புள்ளிகளுடன் உள்ளது. முன்னதாக முன்னணியில் இருந்த பாக்கியலட்சுமி சீரியலை இந்த தொடர்கள் பின்தள்ளியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X