இந்த தப்பை செய்ய ஆரம்பிச்சுட்டா அது ஒரு புதைகுழி... சூப்பர்!
சென்னை: சன் டிவியின் கல்யாண வீடு சீரியலில் ராஜாவுக்கு அருமையான புத்திமதி சொல்றான் கெட்டவன் செல்வம்.
எனக்கு ஒரு காரியம் செய்து தரணும்... அதுக்கு நான் நீ எவ்ளோ பணம் கேட்டாலும் தரேன்னு சொல்லி, ரோஜாவை நாசம் செய்து அவளை சீரழிச்ச செல்வத்தை தேடி போறான்.
ரோஜாவை சாகடிக்கணும்...சூர்யாவை கடத்தணும்னு அசைன்மென்ட் குடுக்கறான்.

கெட்டவன்தான் முதலாளி
முதலாளி நான் கெட்டவன்தான்...ஆனாலும் எனக்குன்னு சில கொள்கைகள் இருக்கறதுனால சொல்றேன். சூர்யாவை கல்யாணம் பண்ணிக்க போறீங்க...பின்னே எதுக்கு அவளைக் கடத்தணும்னு செல்வம் கேட்கறான். என்னை இவ்வளவு அலையவிட்ட அவளை கல்யாணம் செய்துக்கறேனோ இல்லையோ... அவளை ஒரு முறையாவது அனுபவிக்கணும்னு ராஜா சொல்றான்.

இது புதை குழி
வேணாம் முதலாளி..நான் கெட்டவனா இருந்தாலும் அட்வைஸ் பண்றேன். பொண்ணுங்களை சீரழிக்கறதுன்னு இறங்கிட்டா அது ஒரு புதை குழி மாதிரி நம்மை இழுத்துகிட்டே போகும். யோசிச்சு முடிவெடுங்கன்னு சொல்றான். இல்லை செல்வம் நான் முடிவு பண்ணிட்டேன்.நீ நான் சொல்றதை செய்யுன்னு சொல்றான்.

செல்வம் ஆசை
நான் பசங்க கூட டிஸ்கஸ் பண்ணிட்டு வரேன் முதலாளின்னு சொல்லிட்டு,கூட இருந்த மூணு பசங்க கூட பேசா தனியாகப் போக, அவனுங்க கேட்கறானுங்க... ரோஜாவே எவ்வளவு அழகு... அதே மாதிரி சூரியாவும் அழகாத்தானே இருப்பா.. அண்ணா நாமும் அவளைன்னு இழுக்க...நான் புதை குழின்னு சொன்னது அவனுக்கு மட்டும் இல்லைடா .. நமக்கும் சேர்த்துதான்.. நாமும் அனுபவிப்போம்னு சொல்றான் செல்வம்.

ரோஜாவை சீரழிச்ச
ரோஜாவை செல்வம் கும்பல்தான் நான்கு பேரா சேர்ந்து சீரழிச்சாங்க. ரோஜா தன் அக்காவுக்கு விரித்த இந்த சீரழிக்கும் யோசனை வலையில் தானாக வீழ்ந்து மாட்டிக் கொண்டாள் அப்போதும் செல்வம் ரோஜாவுக்கு முதலில் அட்வைஸ்தான் பண்ணினான்.
இந்த அட்வைஸ் பார்க்கற நமக்குத்தான் என்று எடுத்துக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











