முதல் முறையாக மூன்று மெகா சீரியல்களின் மகாசங்கமம்...எந்தெந்த சீரியல்கள் தெரியுமா ?
சென்னை : பிரபல சீரியல்களை ஒன்றாக இணைத்து மகாசங்கமமாக வழங்கி வருவது டிவி சேனல்களில் லேட்டஸ்ட் டிரெண்டாக மாறி உள்ளது. சன் டிவி, விஜய் டிவி உள்ளிட்ட பல டிவிகளில் இது வழக்கமாகி வருகிறது.
அதிலும் விஜய் டிவியில் பிரபல சீரியல்களின் மகாசங்கமம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து மகாசங்கமங்கள் அதிகரித்து வருகின்றன. விறுவிறுப்பை கூட்டுவதற்காக மகாசங்கமங்கள் ஒளிபரப்பப்பட்டாலும், ரசிகர்களுக்கு அது வித்தியாசமான அனுபவத்தை தந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரு சீரியல்களின் சங்கமம்
அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி.,யின் டாப் ரோட்டிங் சீரியல்களான பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியல்களின் மகாசங்கமம் கடந்த ஒரு வாரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. வழக்கமான கதைக்களத்தில் இருந்து சற்று டிராக் மாறி இருந்தாலும், கலகலப்பாக போய் கொண்டிருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்
சென்னையை சுற்றி பார்க்க குடும்பத்துடன் கிளம்பி வருகிறது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம். வழியில் வேன் பிரச்சனையாகி நிற்க, சரியாக தமிழும் சரஸ்வதியும் சீரியல் தமிழ் வீட்டின் முன் வேன் நிற்கிறது. அப்போது கோதை வீட்டில் பிரச்சனை வர, தமிழின் உயிரை காப்பாற்ற போய், தங்களின் பொருட்களை இழக்கின்றனர் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.

இரு குடும்பங்களின் சங்கமம்
இரு குடும்பமும் நண்பர்கள் ஆகிறார்கள். பிறகு மற்றொரு ட்விஸ்டாக சரஸ்வதியின் அப்பா சொக்கலிங்கமும், மூர்த்தியும் ஒரே ஊர்காரர்கள், குடும்ப நண்பர்கள் என காட்டுகிறார்கள். பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் குடும்பங்கள் இணைந்து மகாபலிபுரத்திற்கு டூர் செல்வதாக காட்டுகிறார்கள். இடையிடையே பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன், வியாபாரத்தை காப்பாற்ற போசித்து வருவதையும் காட்டுகிறார்கள்.

ப்ரோமோவில் புதிய ட்விஸ்ட்
தமிழ், சரஸ்வதி திருமணம் முடிவாகும் வரை இந்த மகாசங்கமம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிய ட்விஸ்டாக இன்று இந்த வார எபிசோட்களுக்கான புதிய ப்ரோமோ ஸ்டில் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம், தமிழும் சரஸ்வதியும் கோதை ஆகியோருடன் பாக்யலட்சுமி சீரியல் பாக்யாவும் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது.

மூன்று சீரியல்கள் சங்கமம்
இதில் பாக்யா எப்படி வந்தார் என ரசிகர்கள் யோசித்துக் கொண்டிருக்கையில், பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழும் சரஸ்வதியும் சீரியல்களுடன் பாக்யலட்சுமி சீரியலும் இணையும் மகாசங்கமம் இன்று முதல் ஒளிபரப்பாக உள்ளதாம். மகாசங்கமங்கள் என்றாலே இதுவரை இரண்டு சீரியல்களை இணைத்து தான் காட்டினார்கள். தற்போது விஜய் டிவி.,யில் முதல் முறையாக மூன்று மெகா சீரியல்கள் இணையும் மகாசங்கமம் ஒளிபரப்பாக உள்ளது.

நல்லாவே இல்லப்பா
இது ரசிகர்களை குஷிப்படுத்தினாலும், கண்ணன் இல்லாத மகாசங்கமம் நன்றாகவே இல்லை என ரசிகர்கள் பலர் கமெண்ட் செய்துள்ளனர். இன்னும் சிலர், கதையை எப்படி கொண்டு செல்வது என தெரியாததால் இப்படியாக காலத்தை கடத்துவீர்கள் என கேள்வி கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











