பிக் பாஸ் சீசன் 5ல் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து பங்கேற்கவில்லையாம்.. என்ன இப்படி ஆகிடுச்சே?

சென்னை: பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து கலந்து கொள்கிறார் என தகவல்கள் வெளியான நிலையில், திடீரென அவர் இந்த சீசனில் பங்கேற்கவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigg Boss Tamil season 5 Launch Date Revealed | Kamal Hassan

கமல்ஹாசன் தொகுத்து வழங்க விரைவில் பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி விஜய் டிவியில் ஆரம்பமாக உள்ளது.

ரம்யா கிருஷ்ணன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், குக் வித் கோமாளி கனி, நகுல் என ஏகப்பட்ட பிரபலங்கள் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

வழக்கம் போல

வழக்கம் போல

ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட பிரபலங்கள் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளனர் என்கிற தகவல்கள் வெளியாவதும், அதனை அவர்கள் மறுப்பதும் தொடர் கதையாகி வருகின்றன. சில பிரபலங்களிடம் விஜய் டிவி நடத்தும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவதாலும் இந்த பிரச்சனை உருவாகும்.

நோ சொன்ன மகேந்திரன்

நோ சொன்ன மகேந்திரன்

மாஸ்டர் மகேந்திரன் பெயரும் இதே போல அடிபட, நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை பாஸ் என்னை ஆளை விட்டுடுங்க என ஒரே ஓட்டமாக ஓடிவிட்டார். மாஸ்டர் படத்திற்கு பிறகு தனுஷின் மாறன் படத்தில் நடித்து வரும் மகேந்திரனுக்கு ஏகப்பட்ட புதிய படங்கள் கிடைத்து வருகிறது.

காமெடி நடிகர்கள்

காமெடி நடிகர்கள்

மாடல் நடிகர்கள், நடிகைகள், வயதான நடிகர்கள், இளம் ஹீரோ, ஹீரோயின், விஜய் டிவி நடிகர்கள், சூப்பர் சிங்கர் பாடகர்கள் மற்றும் காமெடி நடிகர்கள் என ஒவ்வொரு சீசனுக்கும் பல தரப்பு ஆட்களை பிக் பாஸ் வீட்டுக்குள் 100 நாட்கள் அடைத்து வைத்து நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.

ஜிபி முத்துவின் பெயர்

ஜிபி முத்துவின் பெயர்

இந்த சீசனில் காமெடி நடிகராக டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அவரது பெயரும் இடம்பெற்றது. கடந்த ஆண்டும் டிக் டாக் பிரபலங்களான சூர்யா தேவி மற்றும் இலக்கியா பெயர்கள் இடம்பெற்றது. ஆனால், கடைசியில் அவர்கள் யாருமே பங்கேற்கவில்லை.

ஜிபி முத்து இல்லை

ஜிபி முத்து இல்லை

அதே போல இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் டிக் டாக் பிரபலமான ஜிபி முத்துவின் பெயர் இடம்பெற்ற நிலையில், தற்போது அவர் கலந்து கொள்ளப் போவதில்லை என்கிற தகவல் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியாக்கி உள்ளது. மேலும், யாரெல்லாம் கழண்டு கொள்ளப் போகிறார்கள் யாரெல்லாம் உறுதியாவார்கள் என்பது விரைவில் தெரிந்துவிடும்.

சன்னிலியோன் படத்தில்

சன்னிலியோன் படத்தில்

டிக் டாக் பிரபலமான ஜிபி முத்து இயக்குநர் யுவன் இயக்கத்தில் சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தில் பிசியாக நடித்து வருகிறார். நேற்று அந்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியானது. ஜிபி முத்துவுடன் நடிகர் சதீஷ், யோகி பாபு, தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்ட ஏராளமான தமிழ் நடிகர்கள் நடித்து வருகின்றனர்.

யூடியூப் வீடியோக்கள்

யூடியூப் வீடியோக்கள்

நகைச்சுவை கலந்த ஆபாச பேச்சு பேசியே ஜிபி முத்து டிக்டாக்கில் பிரபலமானார். டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட நிலையில், தனியாக யூடியூப் தொடங்கியும் மற்ற யூடியூப் குழுக்களுடன் இணைந்தும் பணியாற்றி வருகிறார் ஜிபி முத்து. சன்னி லியோன் படத்தை தொடர்ந்து மேலும், சில படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் கமீட் ஆகவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X