ஜீ தமிழ் டிவியில் போலீஸ் சீரியல் கதை திருமாங்கல்யம்
சினிமாவில் போலீஸ் கதை என்றாலே அடி தடி, என்கவுண்டர், சாகஸம் நிறைந்த கதையாக இருக்கும். டிவி சீரியலில் போலீஸ் கதை ஒளிபரப்பாக உள்ளது.
இது சாகஸம் மட்டுமல்ல, காதல், குடும்ப சென்டிமெண்ட் நிறைந்த கதையாம். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நவம்பர் 10 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ‘திருமாங்கல்யம்' எனும் புத்தம் புதிய மெகா தொடரை ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ என்டர்டெய்ன்மென்ட் என்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்தின் தயாரிப்பு அங்கமான எஸ்ஸல் விஷன் புரொடக்சன் லிமிடெட் தமிழில் தயாரிக்கும் முதல் தொடர் ‘திருமாங்கல்யம்'.
போலீஸ்னா சும்மவா?
வீட்டை விட்டு வெளியே வந்தால் தினமும் நாம் சந்திக்கும் ஒரு கதாபாத்திரம் போலீஸ். போக்குவரத்தை ஒழுங்குபடுவதிலிருந்து , சட்ட ஒழுங்கைப் பாதுகாப்பது வரை அனைத்து சமுதாய கடமைகளையும் காவல் துறையினர் செய்வதால் மட்டுமே நாம் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.
போலீஸ் குடும்பம்
அந்த காவல்துறை அதிகாரியின் குடும்பம், நம்மைப் போன்று அமைதியான வாழ்க்கை வாழ்கிறதா? என அலசுவதே இத்தொடரின் முக்கிய கரு.
போலீஸ் மீது வெறுப்பு
ஒரு போலீஸ் குடும்பத்தில் மணமுடிக்கப்பட்ட ஒரு தாய், ‘தன்னுடைய பெண்ணை யாருக்கு வேண்டுமானாலும் திருமணம் செய்து கொடுப்பேன். ஆனால், ஒரு போலீஸ் குடும்பத்திற்கு மட்டும் திருமணம் செய்து கொடுக்க மாட்டேன்' என்று வைராக்கியமாக இருக்கிறாள்.
போலீஸ் உடன் திருமணம்
ஆனால், அந்த தாயின் எண்ணத்திற்கு எதிர்மாறாக அவளது பெண் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளைக் காதலித்து திருமணம் செய்துகொள்கிறாள்.
என்ன சிக்கல்
இதை அறிந்த அந்த தாயும், அந்த குடும்பமும் என்ன முடிவை எடுத்தார்கள்? இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட குடும்பம் என்ன மாதிரியான சிரமங்களை சந்திக்க நேர்ந்தது? போன்ற பல சிக்கல்களுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் ‘திருமாங்கல்யம்' தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.
ஜீ தமிழ் டிவியில்
முற்றிலும் குடும்பப் பின்னணியை மையமாக வைத்தே இத் தொடரின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் ஜாதவ் திரைக்கதை அமைக்க, ராம்சிங் ஒளிப்பதிவு செய்ய, மகேஷ் இயக்குகிறார். நவம்பர் 10 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:30 மணிக்கு ஜீ தமிழில் இத் தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications











