இது ஜெயில் இல்ல.. வனிதா ஒன்னும் வார்டன் இல்ல.. பொறிந்து தள்ளும் ஷெரின்.. இன்னைக்கும் இருக்கு!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இன்றும் வனிதாவுக்கும் ஷெரினுக்கும் கடுமையான சண்டை நடைபெறுவது புரமோவில் தெரியவந்துள்ளது.
பிக்பாஸ் வீட்டில் இணை பிரியா தோழிகளாக இருந்தவர்கள் வனிதாவும் ஷெரினும். நேற்று ஷெரின் தனது வேலையை ஒழுங்காக செய்வதில்லை என்று கூறியதால் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்பிய வனிதா ஷெரினிடம் தர்ஷன் மீது உனக்கு இருக்கும் அஃபேரால் நீ உன் வேலையில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறினார். இதனால் கோபமடைந்த ஷெரின், நீ எப்படி எங்கள் உறவை அஃபேர் என்று சொல்லுவாய் என கேட்டு குதித்தார்.

தெளிவுபடுத்திய ஷெரின்
தொடர்ந்து வனிதாவை கண்ட மேனிக்கு கத்திய ஷெரின், தர்ஷனுக்கும் தனக்கும் இடையில் ஒன்றும் இல்லை என்று கூறி தெளிவுப்படுத்தினார். பின்னர் கதறி அழுத ஷெரினுக்கு சேரனை தவிர வேறு யாரும் ஆறுதல் கூறவில்லை.

குக்கிங் டீம்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது புரமோவில் இன்றும் ஷெரினுக்கும் வனிதாவுக்கும் இடையே சண்டை நடப்பது தெரியவந்துள்ளது. அதாவது, வீட்டின் கேப்டனான வனிதா, சேரனையும் ஷெரினையும் குக்கிங் டீமில் போட்டுள்ளார்.

தர்ஷனுடன் விளையாட்டு
ஆனால் ஷெரின் சமையல் வேலையை செய்யாமல் தர்ஷனுடன் தலையணையை வைத்து விளையாடிக் கொண்டிருக்கிறார். சேரன் மட்டும் தனியாக வேலை செய்து கொண்டிருக்கிறார்.

நீங்க கேட்டுக்குங்க
இதனை கவனித்த வனிதா, சேரனிடம் உங்களுடன் போட்ட ஆள் இங்கே இல்லை. நீங்க கேட்டுக்குங்க என்று கூறுகிறார். இதனையறிந்த ஷெரின், கிச்சனுக்குள் வந்து என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் நான் செய்கிறேன் என்று கூறுகிறார்.

உனக்கு மட்டும்தான் வரும்
ஆனால் அந்த இடத்தை விட்டு நகரும் வனிதா நீ எனக்காக செய்ய வேண்டாம். நீ எந்த டீமில் இருக்கிறாயோ அந்த வேலையை செய்ய கத்துக்கோ என்று கூறிவிட்டு செல்கிறார். இதனால் கோபமாகும் ஷெரின், எனக்கு எந்த வேலையும் செய்ய வராது உனக்கு மட்டும்தான் வரும் என்கிறார்.

அவங்க வார்டன் இல்ல
பின்னர் பாத்ரூமில் சாக்ஷியுடன் அமர்ந்து பேசும் ஷெரின், இது ஜெயில் இல்ல, அவங்க ஒன்னும் வார்டன் இல்ல. 24 மணி நேரமும் அவங்க சொல்றத செய்ய என்று கோபமாக பேசுகிறார். சேரனும் வனிதாவும் அமைதியாக அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இப்படியாக முடிகிறது அந்த புரமோ.


Click it and Unblock the Notifications











