என்ன ஒரு சுயநலம்.. அப்பாவ அசிங்கப்படுத்துறாங்க.. இன்னைக்கும் அமைதியா வேடிக்கை பார்த்த லாஸ்லியா!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள லாஸ்லியா இன்றும் சேரன் அசிங்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்தார்.
பிக்பாஸ் வீட்டில் உள்ள லாஸ்லியா, இயக்குநர் சேரனை, எனது அப்பா போன்று இருக்கிறீர்கள் என்று கூறினார். மேலும் அவரை சேரப்பா சேரப்பா என்றே அழைத்து வருகிறார்.
ஆனால் சேரனுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் நைசாக நழுவி விடுவார். சேரனுக்கு மட்டுமல்ல பிக்பாஸ் வீட்டில் யாருக்கு பிரச்சனை என்றாலும் குரல் கொடுக்காமல் நழுவி விடுவார் லாஸ்லியா.

அப்போதும் வாய்திறக்கவில்லை
கடந்த வாரம் மீரா மிதுன், சேரன் மீது அபாண்டமாக பழி போட்ட போது கூட சாஸ்திரத்துக்கு ஒரே ஒரு கேள்வியை கேட்டுவைத்தார். அப்பாவுக்கு ஒரு பிரச்சனை என்றால் மகள் அப்படிதான் ரியாக்ட் செய்வாரா?

ஏதோ ஒரு ஆதாயத்திற்காக
சும்மா கொந்தளித்து தெறிக்க விட வேண்டாமா? ஆனால் லாஸ்லியா சரியான காரியவாதி. கவினுடனான ரிலேஷன்ஷிப் பற்றிக்கூட இதுவரை சேரனுடன் ஒன்றும் பேசவில்லை லாஸ்லியா. ஏதோ ஒரு ஆதாயத்திற்காகதான் சேரனுடன் நெருக்கமாக உள்ளார்.

மகள் போன்று பாவிக்கும் சேரன்
சேரனுக்கு எந்த பிரச்சனை என்றாலும் அமைதியாக வேடிக்கைதான் பார்க்கிறார். ஆனால் சேரன், லாஸ்லியாவை உண்மையாகவே தனது மகள் போன்றுதான் பாவிக்கிறார்.

உன் பக்கம்தான் நிற்பேன்
நேற்றைய எபிசோடில் கூட, பாத்ரூமில் அழுத லாஸ்லியாவை சேரன் சமாதானப்படுத்த சென்றார். அப்போது நீங்கள் எனக்கு ஆதரவாக பேசவில்லை என்றார் லாஸ்லியா. அதற்கு பதில் கூறிய சேரன், எப்போதும் உனக்கு ஆதரவாகதான் இருப்பேன், உன் பக்கம்தான் நிற்பேன் என தான் பெற்ற மகளிடம் பேசுவதை போல பேசினார் சேரன்.

தர்ஷன் மட்டும்தான்
அதனை பார்க்கவே உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் இருந்தது. இந்நிலையில் இன்றைய புரமோக்களில் சரவணன், சேரனை அவ்வளவு தரக்குறைவாக பேசி அசிங்கப்படுத்துகிறார். அதற்கு தர்ஷன் மட்டும்தான் சேரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறார். லுசு என்ற வார்தையெல்லாம் பயன்படுத்தாதீர்கள் என்று சரவணனை கண்டித்த ஒரே ஆள் தர்ஷன் மட்டும்தான்.

அசிங்கப்படுவதை..
சாண்டியும் கவினும் அவருடைய கேங்கில் இருப்பவர்கள் என்பதால் வாயே திறக்கவில்லை. பக்கத்திலேயே கமுக்கமாக உட்காந்திருந்தனர். ஆனால் லாஸ்லியா சேரன் பக்கத்திலேயே உட்காந்திருக்கிறார் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. சேரன் அசிங்கப்படுவதை அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார்.

மிக்ஸர் சாப்பிடும் லாஸ்லியா
மதுமிதா கூட சேரனை அப்படி சொல்லாதீர்கள் என்று கண்டிக்கிறார். ஆனால் லாஸ்லியா அப்படியே அம்மிக்கல்லு போல உட்காந்து அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டிருகிறார். ஏற்கனவே லாஸ்லியா பிக்பாஸ் வீட்டில் மிக்ஸர் சாப்பிடுகிறார் என்று கலாய்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்று அதனை புரூவ் செய்துள்ளார் லாஸ்லியா.


Click it and Unblock the Notifications











