இன்றும் ஏழரையை கூட்டும் மீரா.. யாரு சிக்கினாங்களோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மீராவை பார்த்தாலே எரிச்சல் போய் தற்போது பீதியாகிறது.
சூழ்நிலைக்கு ஏற்றதுபோல் யாரை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் இழுத்து ரோட்டில் விட்டுவிடுவார் என்பது மட்டும் இதுவரை அவர் நடந்து கொண்டதை வைத்து தெளிவாகியுள்ளது. நேற்று சேரன் மீது மீரா அப்படி ஒரு குற்றச்சாட்டை கூறிய பின்னர் பிக்பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் அச்சமடைந்துள்ளனர்.
நாள்தோறும் ஏதாவது ஒரு பிரச்சனையை கிரியேட் செய்து, கடைசியில் கண்ணீருடன் முடிப்பதுதான் மீராவின் விளையாட்டு யுத்து. நேற்றும் கூட சேரன் குறித்து அப்படி ஒரு புகாரை கூறி மீரா கடைசியில் நான்தான் தவறு என்று கூறி கண்ணீர் விட்டு சிம்பத்தியை கிரியேட் செய்ய முயன்றார்.

ஏழரையை கூட்டும் மீரா
இந்நிலையில் இன்றும் ஏதோ ஒரு ஏழரையை கூட்டியுள்ளார் மீரா மிதுன். இன்று வெளியான புரமோவில் நடிப்புக்கு மொழி தேவையில்லை ஊமையாக இருக்கும் எத்தனையோ பேர் நடிக்கிறார்கள் என்று கூறுகிறார்.

லா பேசும் மீரா
அப்போது குறுக்கிடும் சாக்ஷி இந்த இடத்தில் கலாச்சார வேறுபாட்டை கொண்டு வராதீர்கள், அதனை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று கூறிவிட்டு வெளியே செல்கிறார். அப்போது மீண்டும் தொடரும் மீரா, எல்லோருக்கும் அவரவர் ஒபினியனை சொல்ல ஞாயம் இருக்கிறது என்று லா பேசுகிறார்.

சாக்ஷி, ஷெரின் கண்ணீர்
ஐந்து வாரங்களாக எந்த தவறும் செய்யாமல் என்னை நாமினேட் செய்தீர்களே நான் ஏதாவது கேட்டேனா நான் இப்படிதான் கோப்பட்டேனா என்று சண்டை போடுகிறார். இதைத்தொடர்ந்து சாக்ஷியும் ஷெரினும் அழுகின்றனர் அவர்களை சக ஹவுஸ்மேட்ஸ்கள் சமாதானப்படுத்துகின்றனர்.

யார் சிக்கினார்களோ
ஆக இன்றும் ஒரு ஏழரையை கூட்டியுள்ளார் மீரா மிதுன். இதில் சிக்கியது தற்போது வரை சாக்ஷி, ஷெரின் என்று தெரிகிறது. இன்றைய முழு எபிசோடையும் பார்த்தால்தான் தெரியும் யாரை மீரா வச்சு செய்திருக்கிறார் என்று.


Click it and Unblock the Notifications











