பாரதியும்… கண்ணம்மாவும் சேர்ந்தாச்சு… அப்போ சீரியல் முடிய போகுதா?
சென்னை : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக சேர்ந்துள்ளதால் இந்த சீரியல் முடிய போகுதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது அனைவரின் மனம் கவர்ந்த இத்தொடர், இல்லத்தரசிகளுக்கு மிகவும் பிடித்த தொடர்களில் ஒன்றாக உள்ளது.

பாரதி கண்ணம்மா
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. இதில், கடந்த சில மாதங்களான பாரதி, கண்ணம்மா ரொமான்ஸ் அதிரிபுதிரி செய்து வருகிறது. நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து ஒன்றாக ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் எப்படியாவது சேர்ந்துவிடவேண்டும் என்று இல்லத்தரசிகள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

கோபத்தில் வெண்பா
ஜெயிலில் இருந்து திரும்பி வெண்பா இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து இருப்பதை பார்த்து, இவர்களை பிரிக்க பல திட்டம் தீட்டிவருகிறார். பாரதியுடன் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என பல பிளான்களை போட்டு அதில் தோற்றும் போய் தற்போது உச்சக்கட்ட கோபத்தில் இருக்கிறார் வெண்பா.

கை கோர்த்தபடி
இதையடுத்து, நேற்றைய எபிசோடில், பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக பூஜைக்கு கை கோர்த்து வருவதை பார்த்து வீட்டில் உள்ள அனைவரும் சந்தோஷம் அடைகின்றனர். சௌந்தர்யா அவர்களை ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து செல்கிறாள். வீட்டிற்குள் போனதும் அனைவரும் சந்தோஷமாக பேசி கொண்டிருக்கின்றனர்.

இது எல்லாம் கனவா
இதையடுத்து, இன்றைய எபிசோடில், பாரதியும் கண்ணம்மாவும் ஒன்றாக அமர்ந்து ஒருவழியாக சிறப்பாக பூஜையை முடித்து விட்டனர். பூஜை நடக்கும்போது கண்ணம்மா இதெல்லாம் கனவா நிஜமா என தெரியவில்லை என கண்ணமா கேட்க நீ சந்தோஷமா இருக்க தானே என்று பாரதி கேட்கிறார். ரொம்ப சந்தோஷமா இருக்கு என கண்ணம்மா சொல்கிறார்.
Recommended Video

சீரியல் முடிய போகுதா?
இதையடுத்து, கண்ணம்மாவிடம் பேசிய பாரதி, 10 வருஷமா நாம இரண்டு பேரும் வாழ்க்கைய தொலைச்சிட்டோம், உன் அன்பு பாசம் எல்லாம் பொய் இல்லை, என் மேல நீ காட்டும் அன்பு, பாசம், காதல் எல்லாத்தையும் நான் புரிஞ்சிக்கிட்டேன். பல நேரம் நீ நடிக்கிறனு நினைச்சு உன் மேல வெறுப்பாக இருந்து இருக்கேன்,ஆனால் நீ என்மேல காட்டுனது உண்மையான அன்பு. இனிமேலும் நீ ஏன் தனியாக கஷ்டப்படனும் என்று கேட்கிறார். நீண்ட நாட்களான பிரிந்து இருந்த இவர்கள் தற்போது சேர்ந்துள்ளதால், விரைவில் சீரியல் முடிய போகுதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











