முதல் எலிமினேஷன்.. அதிர்ச்சியில் போட்டியாளர்கள்.. புலம்பும் விஜே பார்வதி.. சர்வைவர் புரமோ!
சென்னை: சர்வைவர் புரமோவில் தன்னை யாருக்கும் பிடிக்கவில்லை என புலம்பி தீர்த்துள்ளார் விஜே பார்வதி.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி சுவாரசியமாகவும் விறுவிறுப்பாகவும் செல்கிறது.
இதனால் இந்நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக நிகழ்ச்சியில் கொடுக்கப்படும் டாஸ்க்குகள் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு அதிகரித்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ
இந்த வாரம் சர்வைவர் நிகழ்ச்சியில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார் என கூறப்படுகிறது. நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரமே ஆன நிலையில் இந்த வாரம் முதல் எலிமினேஷன் இருக்கும் என தெரிகிறது. இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

துண்டுச் சீட்டில் எழுதும் போட்டியாளர்கள்
அதன்படி யார் எலிமினேட் ஆக வேண்டும் என போட்டியாளர்கள் துண்டுச் சீட்டு எழுதி கொடுக்கப்பட்டுள்ள குடுவைக்குள் போடுகின்றனர். தங்களுக்குள் பேசிக் கொள்ளும் சக போட்டியாளர்களான விஜலக்ஷ்மி, லட்சுமி பிரியா உள்ளிட்டோர் யார் முதலில் செல்வார்கள் என தங்களுக்குள் டிஸ்கஷன் செய்து வருகின்றனர்.

என்னை யாருக்கும் பிடிக்கல
அதன்படி இந்திரஜா, சிருஷ்டி டாங்கே ஆகியோரின் பெயர்கள் அடிப்படுவதாக தெரிகிறது. இதனிடையே விஜே பார்வதி, அங்கு இருக்கும் போட்டியாளர்கள் யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்பது மட்டும தனக்கு தெளிவாக தெரிகிறது என புலம்புகிறார். எலிமினேஷன் என்றதுமே போட்டியாளர்களின் முகங்கள் மாறிவிட்டது.

அதிர்ச்சியாகும் போட்டியாளர்கள்
மற்றொரு புரமோவில் கேம்மின் ரூல்ஸை சொல்லும் அர்ஜூன் யார் அதிக ஓட்டுக்களை பெற்றுள்ளாரோ அவர் இந்த போட்டியில் இருந்து எலிமினேட் செய்யப்படுவார் என கூறுகிறார். இதனால் போட்டியாளர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

அனல் பறக்கும் சர்வைவர்
ஏற்கனவே டாஸ்க்குகள் டஃப்பாக கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் எலிமினேஷனும் அறிவிக்கப்படுவதால் சர்வைவர் நிகழ்ச்சி அனல் பறக்க தொடங்கியுள்ளது. இதனிடையே இந்த வாரம் எலிமினேஷன் லிஸ்ட்டில் விஜே பார்வதி, இந்திரஜா ஷங்கர், சிருஷ்டி டாங்கே மற்றும் ராம் ஆகியோர் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











