Thirumanam serial:என்ன கர்மம் இது...புருஷனை விட்டுட்டு போன்னு மனைவிகிட்டயே சொல்றதா?
சென்னை: கலர்ஸ் தமிழ் டிவியின் திருமணம் சீரியல் அநியாயத்துக்கு பெண்களுக்கு எதிரானதா இருக்குதுங்க. பெண்களுக்கு பொறுமை தேவைதான்...அதுக்காக இவ்ளோ பொறுமையா ஒரு பெண்ணை காண்பிச்சு, முன் உதாரணமா இருக்கணுமா என்ன?
சந்தோஷ் சக்தியை காதலிக்கறான்.சந்தர்ப்ப வசத்தால் ஜனனியை கல்யாணம் பண்ணிக்க நேர்ந்துருது. பிடிக்கலைன்னா கல்யாணத்துக்கு முன்னாடியே தப்பிச்சு ஓடி இருக்கணும்.இல்லை தில்லா கல்யானம் பிடிக்கலைன்னு நிறுத்தி இருக்கணும்.
ரெண்டும் இல்லை, ஜனனியை ஏமாத்தி வாழ்ந்துகிட்டு இருக்கறவன் மாதிரி ஒரு வாழ்க்கை. அவள்கிட்ட பேசி ரெண்டு பேரும் பிரிஞ்சுடலாம். எனக்காக சக்தி காத்திருப்பான்னு ஜனனிகிட்ட சொல்லி டைவர்ஸ் பண்ணிடலாம்னு முடிவெடுக்கறான்.

ஜனனி சக்தி
சக்தி சந்தோஷை பார்க்க இந்தியா வந்திருக்கா. அவ வீட்டிலிந்த காதலுக்கு சம்மதம் இல்லேன்னாலும், தெரியாம கல்யாணம் செய்துக்க முடிவெடுக்கறாங்க. ஆனால், டைவர்ஸ் கிடைக்க கால தாமதம் ஆகுது.ஒரு காரியம் செய்யறா சக்தி. அதாவது ஜனனிக்கு போன் பண்றா. சக்தி ஏற்கனவே ஜனனியின் தோழி என்பதால், சக்தி எதுக்கு நமக்கு போன் பண்றான்னு ஜனனி போனை எடுக்கறா.

நீயா போயிரு
ஜனனி நான் சக்தி பேசறேன்...நான் ஒண்ணு சொல்லுவேன்.. என்னை தப்பா நினைக்க கூடாதுன்னு சொல்றா. சொல்லுங்க சக்தி நான் தப்பா நினைக்க மாட்டேன்னு ஜனனி சொல்றா. எனக்கு சந்தோஷை ரொம்பநான் மிஸ் பண்ற மாதிரி இருக்கு. டைவர்ஸுக்கு ரொம்ப நாளா அலைஞ்சும் உங்களுக்கு கிடைக்கலை. அதனாலன்னு இழுக்கறா.

என்ன செய்யணும்?
சரி அதனால என்ன செய்யணும்னு சொல்லுங்க சக்தின்னு ஜனனி கேட்க.. இல்ல..இல்ல..அது வந்து நீங்களா கூடிய சீக்கிரம் சந்தோஷை விட்டு பிரிஞ்சு உங்க வீட்டுக்கு போயிருங்களேன். டைவர்ஸ் கிடைக்கறப்போ கிடைக்கட்டும்னு சொல்றா. அதோட நான் சொல்றது உங்களுக்கு புரியுதான்னு கேட்கறா.

சக்தி புரியுது
இந்த இடத்துல ஒரு நல்ல மனைவியா இருந்தால், நீ யாரடி என் புருஷனை விட்டுட்டு போக சொல்லன்னு கேட்டு இருக்கணும்.. இவ என்னடான்னா மனசுக்குள்ள புருஷன் சந்தோஷ் மேல் கொள்ளை ஆசை வச்சுக்கிட்டு, புரியுது சக்தின்னு சொல்றா. இந்த மாதிரி பொறுமையா பொண்ணுங்களை காமிச்சு மறுபடியும் நளாயினியை உருவாக்காதீங்க.


Click it and Unblock the Notifications











