Don't Miss!
- News கோவை, தஞ்சாவூர், திருவாரூர்.. தாகம் தீர்க்கும் மின்வாரிய அணைகள்.. குடிநீர் வடிகால் வாரியம் அதிரடி
- Technology போச்சு! Paytm-ஐ தொடர்ந்து Kotak Mahindra-க்கு ஆப்பு வைத்த RBI.. இனி உங்க Account, Credit Card-லாம் என்ன ஆகும்?
- Lifestyle இந்த உணவுகளை கண்டிப்பாக பிரஷர் குக்கரில் சமைக்கக்கூடாது.. ஏன் தெரியுமா?
- Finance டீ கடையில் கூட இப்ப கிரெடிட் கார்டு பேமெண்ட் தான்.. ரூ.1 லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை..!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிடிச்ச ஆண்கள் குளிக்கறதை கூடவா.. ? இதுவும் ரொமான்ஸ்தானா...?
சென்னை: சன் டிவியின் ரோஜா மற்றும் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியல்களின் சங்கமம் இந்த வாரத்துல ஒளிபரப்பாகிட்டு இருக்கு.
ரெண்டு குடும்பத்துக்கும் பதினஞ்சு வருஷ கால பகை. கோயில் திருவிழா இந்த வருஷம் நடந்தே தீரணும்னு ஆத்தா அருள் வாக்கு சொன்னதால ஊர் பெரியவங்க சென்னையிலிருக்க ரெண்டு பேர் குடும்பத்துக்கும் அழைப்பு விடறாங்க.
ஊர்க்காரங்க அன்னப்பூரணி அம்மா குடும்பத்தையும், மகாலிங்கம் ஐயா குடும்பத்தையும் கிராமத்தின் ஒரே வீட்டில் அவங்களுக்கே தெரியாம தங்க வச்சுடறாங்க.
லட்சுமி ஸ்டோர்ஸ்
ரோஜா குடும்பமும், லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பமும் ஒரே வீட்டில் தங்க வைக்க பட்டு இருக்கோம்னு, அந்த குடும்பங்களுக்கே தெரியலை. கிராமத்துல அவ்ளோ பெரிய வீடாம்.
மகாலிங்கம்
அன்னபூரணி அம்மாவா வடிவுக்கரசி கம்பீரமா நடிக்க வேண்டிய வாய்ப்பு வந்துருக்குன்னு சொல்லலாம். மாசானி அம்மன் கோயில் திருவிழாவுக்கு வந்திருக்கும் மகாலிங்கம் ,அன்ன பூரணி குடும்பத்தின் பகைக்கு என்ன காரணம்னு இன்னும் சொல்லலை.
நடக்கணும்
ஊர் திருவிழா நடந்தாகணும்னு இந்த குடும்பத்துல அந்த குடும்பம் வராதுன்னும், அந்த குடும்பத்துல இந்த குடும்பம் வராதுன்னும் சொல்லி ரெண்டு குடும்பத்தையும் வர வைக்கறாங்க ஊர்க்காரங்க.
இல்லையா ஷவர்
பெரிய வீட்டில் இந்த பக்கம் தங்கி இருக்கும் ரோஜா குடும்பத்தின் அர்ஜுன்,ஷவர் இல்லாம எப்படிய்யா குளிக்கறதுன்னு வேலைக்காரன்கிட்ட கேட்டுகிட்டு இருக்கான் அர்ஜுன். சார்..அதான் உள்ள போட்டு இருப்பீங்கள்ல மத்ததை கழட்டிட்டு அதோட, இந்த தண்ணியை மொண்டு ஊத்தி குளிங்க சார்னு சொல்றான்.
ரவி குளியல்
லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்தின் ரவி, இந்த பக்கம் வீட்டின் கொல்லைப் புறத்தில் குளிச்சுகிட்டு இருக்கான். அர்ஜுன் குளிப்பதைப் பார்த்து ரோஜாவும், ரவி குளிப்பதை பார்த்து பாக்கிய லட்சுமியும் வெட்கப்பட்டு பார்த்து நிக்கறாங்க..
தனக்கான ஆண்கள் குளிப்பதை பெண்களும் பார்ப்பங்களா... இதுவும் ஒரு வகை ரொமான்ஸோ...