கிழக்கு வாசலில் நிறைய பேருக்கு வெட்டு குத்து... முடியலடா சாமி!
சென்னை: சன் டிவியின் கிழக்கு வாசல் சீரியலில் ரொம்ப வன்முறைங்க. கோயில் திருவிழாவை நடத்துவதில் இரு தரப்பினருக்குள் போட்டி.
நாகப்பன் குடும்பம் கோயில் திருவிழா பூஜைக்கு கிளம்பிவிட, தேவராஜ் கிளம்புவது போல கிளம்பி வீட்டில் இருந்துடறார். எல்லாரும் என்னாச்சுன்னு குழம்பி இருக்க, நாகப்பன் குடும்பம் தவிர பல உயிர்கள் அரிவாள் வெட்டு பட்டு செத்து கிடக்கறாங்க.

பின்னால பார்த்தா தேவராஜ் மேள தாளத்துடன் கெத்தாக குடும்ப சகிதமா கோயில் திருவிழாவுக்கு வந்துகிட்டு இருக்கார். நாகப்பனின் மனைவி, பொண்ணுங்க ரெண்டு பேரும் அப்பாகிட்ட கெஞ்சறாங்க..நம்ம வீட்டுக்கு போயிடலாம்ங்க..அவங்களே திருவிழாவை கொண்டாடட்டும்னு சொல்றாங்க.
முடியவே முடியாது..இத்தனை பேரை வெட்டி சாய்ச்ச அவனை நான் கொல்லாம விட மாட்டேன்னு பாயறார். போலீஸ் நாகப்பனைத் தடுக்கறாங்க. இவ்ளோ பேரு செத்துட்டதுக்கு பிறகு இனி ஒருத்தர் சாக நாங்க விட மாட்டோம் சார்னு தடுக்கறாங்க. இன்னொரு பக்கம் தேவராஜ் ஆளுங்க நாகப்பனை நோக்கி அரிவாளோடு வர்றாங்க.
ஐயோ.. இந்த ஊர்ல இவ்ளோ வன்முறையா.. முடியலை!



Click it and Unblock the Notifications











