செய்திகள் வாசிப்பது சோபனா ரவி…

By Mayura Akilan

தூர்தர்சனில் தமிழ் செய்தி ஒளிபரப்பிய போது ஆர்வத்துடன் பார்த்த மக்கள்... பெண் செய்தி வாசிப்பாளரின் புடவை நகை என்று எதையும் விட்டு வைக்காமல் அலசி ஆராய்ந்த இல்லத்தரசிகள் இருந்தது 20 ஆண்டுகளுக்கு முன்னர்தான்.

சோபனா ரவியும், சந்தியா ராஜகோபாலும், பாத்திமா பாபுவும் செய்தி வாசித்த போது தனி ரசிகர்கள் இருந்தனர்... இன்றைக்கும் அவர்கள் செய்தி வாசித்தாலும் தற்போதைய செய்தி வாசிப்பாளர்களின் ஸ்டைல் மாறிவிட்டது.

புடவைகட்டி பாந்தமாக செய்தி வாசித்தவர்கள் கூட இன்றைக்கு சுடிதார், டி சர்ட், கோட் போட்டு செய்தி வாசிக்கின்றனர். இன்றைக்கு செய்திச்சேனல்கள் பெருகிவிட்டன. செய்தியோடு கூடுதலாக இளமையும் புதுமையும் புகுத்தவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிவிட்டன சேனல்கள்.

ஆங்கில சேனல்களில் அதீத ஸ்டைல் இருந்தாலும் தமிழ் செய்தி சேனல்களில் சில அழகான தமிழ் உச்சரிப்போடு செய்தியை கேட்கத்தூண்டும் வகையில் வாசிக்கும் செய்தி வாசிப்பாளர்களும் இருக்கத்தான் செய்கின்றனர் ஏராளமானோர் இருந்தாலும் சிலரை மட்டுமே பட்டியலிட்டுள்ளோம்

சோபனா ரவி

சோபனா ரவி

புடவை தலைப்பை போர்த்திக் கொண்டு செய்தி வாசித்த சோபனா ரவி... மாறி வரும் ட்ரெண்டுக்கு ஏற்ப கோட் போட்டு செய்தி வாசித்தார். ஆனாலும் அதே உச்சரிப்பு, ஸ்டைல்தான்.

சந்தியா ராஜகோபால்

சந்தியா ராஜகோபால்

இவரும் தூர்தர்ஷனில் செய்தி வாசித்தவர்தான் இப்போது ஜெயா டிவியில் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

பாத்திமா பாபு

பாத்திமா பாபு

தூர்தர்சனில் செய்தி வாசித்த போது பாத்திமா பாபுவிற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது. சினிமாவில் நடிக்கத் தொடங்கி அவர் தற்போது ஜெயா டிவியில் ஓவர் மேக் அப் உடன் செய்தி வாசிக்கிறார்.

சுஜாதா பாபு

சுஜாதா பாபு

சன் டிவி செய்தி சேனலில் 12 ஆண்டுகளுக்கு முன்பு செய்தி வாசிக்கத் தொடங்கிய சுஜாதா பாபு இன்னும் மாறாத அதே அழகுடன் செய்தி வாசித்துக் கொண்டிருக்கிறார்.

ரத்னா

ரத்னா

இவரும் சன் டிவி செய்தி வாசிப்பாளர்தான் சன் டிவியில் செய்தி ஒளிபரப்பு தொடங்கி காலத்தில் இருந்து இன்னமும் ரிட்டையர் ஆகாமல் அழகான உச்சரிப்போது செய்தி வாசிக்கிறார்.

நிர்மலா பெரியசாமி

நிர்மலா பெரியசாமி

செய்தி வாசிப்பை விட முடிக்கும் போது இவர் சொல்லும் வணக்க்க்கம் பிரபலமானது. இப்போது வசந்த் டிவியில் குடும்ப பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கிறார்.

பூங்குழலி

பூங்குழலி

பொதிகையில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமான பூங்குழலி சன்டிவியில் சில ஆண்டுகள் செய்தி வாசித்தார். தற்போது புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிக்கிறார். இவருக்கு என்று தனி ஸ்டைலும், உச்சரிப்பும் உள்ளது.

உமா கதிர்

உமா கதிர்

வின் டிவியில் செய்தி வாசித்த உமா கதிர் கலைஞர் டிவியில் சில ஆண்டுகாலம் செய்தி வாசித்தார். தற்போது புதிய தலைமுறையில் ஸ்டலாக சுடிதார் அணிந்து செய்தி வாசிக்கிறார். இவருக்கு என்று தனி ஸ்டைல் உண்டு.

ராஜேஸ்வரி – பனிமலர்

ராஜேஸ்வரி – பனிமலர்

புதிய தலைமுறை செய்திச் சேனல் வந்த பின்னர் செய்தி வாசிப்பாளர்களின் அழகும் ஸ்டைலும் மாறிப்போனது. ராஜேஸ்வரி, பனிமலர், சரண்யா போன்ற செய்தி வாசிப்பாளர்களின் அழகும் ஸ்டைலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X