டிவி சேனல்களில் அசத்தும் சினிமா பிரபலங்கள்

By Mayura Akilan

மனோரமா ஆச்சி, குட்டி பத்மினி, ராதிகா தொடங்கி ரம்யா கிருஷ்ணன் வரை சின்னத்திரையில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சங்களில் இடம் பிடித்துள்ளனர்.

அவர்களைத் தொடர்ந்து குஷ்பு, விஜயலட்சுமி, ஜெயஸ்ரீ, நதியா, மந்த்ரா என சினிமா பிரபலங்கள் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், நடிகராகவும் வந்து புகழ் பெற்றுள்ளனர்.

புதுப் புது சேனல்கள்... புது புது நிகழ்ச்சிகள் என போட்டி நிலவி வருகிறது. இதில் போட்டு போட்டுக் பல நிகழ்ச்சிகளை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன சேனல்கள்.

தொகுப்பாளினிகளாக அறிமுகம் இல்லாதவர்கள் கொண்டுவருவதை விட மக்களுக்கு அறிமுகமான சினிமா பிரபலங்களை லட்சக்கணக்கில் பணம் கொடுத்து அழைத்து வருகின்றன சேனல்கள்.

புதிதாக நிகழ்ச்சித் தொகுப்பில் களம் இறங்கியுள்ள நடிகர், நடிகையர்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

சிநேகா

சிநேகா

புதுயுகம் சேனலில் மேளம் கொட்டு தாலிகட்டு என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சியினை நடத்துகிறார் சினேகா. அழகான உடை... டிரேட் மார்க் புன்னகை, நகைகள் என அசத்துகிறார் சினேகா என்கின்றனர் இல்லத்தரசிகள்.

அபிராமி

அபிராமி

புதுயுகம் சேனலில் ரிஷிமூலம் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகியுள்ளார் அபிராமி. அழகான தமிழ் உச்சரிப்பு, நேர்த்தியான தொகுப்பு என அசத்துகிறார். சினிமா நடிகைகளில் இவரது நிகழ்ச்சித் தொகுப்பு ரசிக்கும்படியாக இருக்கிறது என்கின்றனர் நிகழ்ச்சியைப் பார்த்தவர்கள்.

சங்கீதா

சங்கீதா

சன் தொலைக்காட்சியில் நடுவராக வந்து இப்போது புதுயுகம் சேனலில் நட்சத்திர ஜன்னல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் சங்கீதா. பிரபலங்களை கேள்வி கேட்கும் பாணியே தனி என்கின்றனர்.

மீனா

மீனா

சூப்பர் குடும்பம் நிகழ்ச்சியில் நடுவராகத்தான் இருக்கிறார் மீனா. சன் டிவி சீரியலில் நடித்த அவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது நடுவராக வந்துள்ளார். இவரது கருத்து சொல்லும் பாணி யாரையும் மனம் நோகடிப்பதில்லையாம்.

லைலா

லைலா

சிரிப்பழகி லைலா இப்போது நடனநிகழ்ச்சியின் நடுவராக வந்து அசத்துகிறார். ஜீ தமிழ் சேனலில் கொஞ்சும் குரலில் பேசுகிறார் என்கின்றனர் ரசிகர்கள்.

டி.ராஜேந்தர்

டி.ராஜேந்தர்

அரட்டை அரங்கம் நிகழ்ச்சியின் மூலம் சன் டிவியில் நுழைந்த டி.ராஜேந்தர் இப்போது சூப்பர் குடும்பம் மூலம் நடுவராகியுள்ளார். போட்டியில் பங்கேற்பாளர்களை விட நடுவரின் கருத்தும், இசையோடு கூடிய பாட்டும் அசத்துகிறது என்கின்றனர் ரசிகர்கள். நடனம் கூட கற்றுக் கொடுத்து நடுங்க வைக்கிறார்.

சூர்யா

சூர்யா

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வந்த சூர்யாவிற்கு தனி ரசிகர்கள் வட்டம் இருந்தது. ஆனால் சினிமாவில் ஜெயித்ததைப் போல சூர்யாவினால் சின்னத்திரையில் ஜெயிக்க முடியவில்லை.

பிரகாஷ்ராஜ்

பிரகாஷ்ராஜ்

செல்லம் என்று கூறி சினிமாவில் பிரபலமான நடிகர் பிரகாஷ்ராஜ் சின்னத்திரைக்கு வந்தது விஜய் டிவியில் நீங்களும் வெல்லாம் ஒரு கோடி நிகழ்ச்சியின் மூலம்தான். ஆரம்பத்தில் அசத்தலாக தொடங்கினார் பிரகாஷ்ராஜ். ஹீரோவை விட வில்லன் பெட்டர் என்றுதான் கூறினார்கள். ஆனால் டி.ஆர்.பியும், ரசிகர்களிடையே வரவேற்பும் கிடைக்காமல் போய்விட்டது. மீண்டும் சினிமாவில் நடிக்கப் போய்விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X