இந்த வாரத்தில் அதிக டிஆர்பி புள்ளிகளை பெற்ற முதல் 10 சீரியல்கள்.. முதலிடத்தில் தொடர்ந்து கயல் சீரியல்!

சென்னை: நிகழ்ச்சிகளை காட்டிலும் ஒவ்வொரு சேனலும் அதிகமான கவனத்தை சீரியல்களில் காட்டி வருகின்றன. அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் இந்த சீரியல்கள் தொடர்ந்து டிஆர்பி அடிப்படையில் மிகச்சிறப்பான இடங்களை பெற்று வருகின்றன. இதில் சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்களுக்கிடையில் அதிகப்போட்டி காணப்படுகின்றன.

இந்த ஆண்டில் 41வது வாரத்திற்கான டிஆர்பி லிஸ்ட் தற்போது வெளியாகியுள்ளது. எப்போதுமே முதல் 5 இடங்களில் விஜய்டிவியின் சீரியல்கள் இடம்பெற்றுவிடும். ஆனால் தற்போது விஜய் டிவியின் முதலிடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியலே ஒட்டுமொத்த டிஆர்பி பட்டியலில் 7வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. முதல் 10 இடங்களில் விஜய் டிவியின் 2 சீரியல்கள் மட்டுமே இடம்பிடித்துள்ளன.

top 10 serials television 10

டாப் 10 சீரியல்கள் லிஸ்ட்: ஒவ்வொரு சேனல்களும் தன்னுடைய நிகழ்ச்சிகள், சீரியல்கள், திரைப்படங்கள் என அடுத்தடுத்து போட்டிப்போட்டுக் கொண்டு ஒளிபரப்பி வருகின்றன. கடந்த வாரத்தில் ஆயுதபூஜை கொண்டாட்டமும் இணைந்துக் கொள்ள, புதிய நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து ஒளிபரப்பின. இதில் பல நிகழ்ச்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சேனலின் டிஆர்பி புள்ளிகளையும் ஏற்றியுள்ளன. அந்த வகையில் இந்த 41வது வாரத்திற்கான டிஆர்பி புள்ளிகளின் அடிப்படையில் முதல் 10 இடங்களை பிடித்துள்ள சீரியல்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் கடந்த வாரத்தை போலவே இந்த வாரமும் முதலித்தை சன் டிவியின் கயல் சீரியல் பிடித்துள்ளது. இந்த சீரியலுக்கு கிடைத்துள்ள டிஆர்பி ரேட்டிங் 9.90.

முதலிடத்தில் சன் டிவியின் கயல்: இதனிடையே கடந்த வாரத்தில் பின்னடைந்திருந்த சன் டிவியின் சிங்கப் பெண்ணே சீரியல் இந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த சீரியலுக்கு இந்த வார டிஆர்பியில் 9.04 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த சீரியலில் தன்னுடைய தோழிக்காக நாயகி செய்யும் அடுத்தடுத்த விஷயங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. இதனிடையே இந்த வாரத்தில் ஒரேயொரு புள்ளி குறைந்த நிலையில் 9.03 புள்ளிகளுடன் சன் டிவியின் மூன்று முடிச்சு சீரியல் ஒட்டுமொத்த பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளது. இதையடுதது 8.40 டிஆர்பியுடன் மருமகள் சீரியல் 4வது இடத்தில் உள்ளது.

முதல் 5 இடங்களில் சன் டிவி சீரியல்கள்: சன்டிவியின் முன்னணி சீரியல்களில் ஒன்றாக நீண்ட காலங்களாக இருந்துவரும் சுந்தரி சீரியலுக்கு இந்த வாரம் கிடைத்துள்ள டிஆர்பி புள்ளிகள் 7.95. இந்த சீரியல் தற்போது 5வது இடத்தை பிடித்துள்ளன. கடந்த வாரத்தில் விஜய் டிவியின் சீரியல்கள் முதல் 5 இடங்களை பிடித்த நிலையில், இந்த வாரத்தில் மிகவும் அதிகமான சரிவை கண்டுள்ளன. இந்த வாரத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் டிஆர்பி அடிப்படையிலான இந்த பட்டியலில் 7வது இடத்தையே பிடிக்க முடிந்துள்ளது. 6வது இடத்தில் சன் டிவியின் ராமாயணம் சீரியல் 6.50 புள்ளிகளுடன் அதகளம் செய்துவரும் நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 6.95 புள்ளிகளே கிடைத்துள்ளன.

top 10 serials television 10

கீழிறங்கிய விஜய் டிவி சீரியல்கள்: இதனிடையே டிஆர்பி அடிப்படையிலான இந்த பட்டியலில் அடுத்ததாக சன் டிவியின் மல்லி சீரியலுக்கு 6.57 புள்ளிகள் கிடைத்துள்ளன. இந்த சீரியல் 8வது இடத்தை பிடித்துள்ள நிலையில், அடுத்ததாக விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் கடந்த வாரத்தை போலவே தொடர்ந்து பாக்கியலட்சுமி சீரியலை பின்னுக்கு தள்ளிவிட்டு 9வது இடத்தை பிடித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 6.05 புள்ளிகளே கிடைத்துள்ளன. இதையடுதது 10வது இடத்தில் ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் உள்ளது. இந்த சீரியல் அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் தற்போது 5.74 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதையடுத்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் 11வது இடத்திற்கு 5.63 புள்ளிகளுடன் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X