சினிமாவிற்கு வந்த சின்னத்திரை பிரபலங்கள்!
சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு படையெடுக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை இன்றைக்கு அதிகரித்து வருகிறது. அதேபோல் சின்னத்திரையில் நுழையும் பலரின் கனவும் சினிமாவாகத்தான் இருக்கிறது.
பொதிகை தொலைக்காட்சி சீரியலில் நடித்த நடிகர்கள் முதல் இன்றைக்கு புதிய சேனல்களில் காலடி எடுத்து வைக்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் வரை பலரும் சினிமாவில் நுழைந்திருக்கின்றனர்.
அவரவர் திறமையைப் பொறுத்து சின்னத்திரை நாயகர்களுக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கிறது. சினிமாவில் சாதிக்க முடியாமல் போனவர்கள் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பிய கதையும் உண்டு. கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட் உலகிலும் சின்னத்திரையில் இருந்து போன பிரபலங்கள் வெற்றிக் கொடி நாட்டியுள்ளனர்.

சிவகார்த்திக்கேயன்
காமெடி நிகழ்ச்சி ஒன்றில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் சிவகார்த்திக்கேயன். போட்டியில் வெற்றி பெற்ற உடன் அதே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார். தன்னுடைய நகைச்சுவையால் பிரபலமான சிவகார்த்திக்கேயன் இன்றைக்கு பிரபலமான சினிமா ஹீரோவாக உயர்ந்துள்ளார்.

சந்தானம்
லொள்ளுசபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம், சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். இன்றைக்கு தனி காமெடியனாக உயர்ந்துள்ளார்.

நீயா நானா கோபிநாத்
நீயா, நானா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் கோபிநாத், பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ள அவர் சமுத்திரகனியில் நிமிர்ந்து நில் படம் மூலம் சினிமாவில் நுழைகிறார்.

மாகாபா. ஆனந்த்
விஜய் டிவியில் இருந்து பலரும் சினிமாவில் நுழைந்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது அது இது எது, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் தொகுப்பாளர் மாகாபா. ஆனந்த் 'வானவராயன் வல்லவராயன்' படத்தில் நடிக்கிறார். இதில் தம்பியாக நடித்த இவர், தற்போது பஞ்சுமிட்டாய் படத்தின் மூலம் ஹீரோவாகிறார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ஒருவர் அறிமுகம் ஆகிறார்.

இமான் அண்ணாச்சி
காய்கறி, பலசரக்கு கடை வியாபாரம் செய்து வந்த இமான் அண்ணாச்சியின் அறிமுகம், அசத்தப் போவது யாரு காமெடி நிகழ்ச்சிதான். மக்கள் டிவியில் சொல்லுங்கண்ணே சொல்லுங்க நிகழ்ச்சியின் ஆங்கரானார். இப்போது சன்டிவியில் அதே நிகழ்ச்சியோடு குட்டி சுட்டீஸ் நடத்தியதில் குழந்தைகள் மத்தியில் ரொம்ப பிரபலம். சீரியல், சினிமா, என கமெடி நடிகராகவும் வலம் வருகிறார் இமான் அண்ணாச்சி.

ஆதவன், சேட்டை செந்தில்
ஆதித்யா சேனலில் கொஞ்சம் நடிக்க பாஸ் மூலம் பிரபலமான ஆதவன், டாடி எனக்கு ஒரு டவுட்டு என்று கேட்கும் சேட்டை செந்தில் ஆகியோரும் சினிமாவில் காமெடியன்களாக களம் இறங்கியுள்ளனர்.

ரேணுகா சஹானி
தூர்தர்சனில் சுரபி நிகழ்ச்சியின் மூலம் இரவு நேரங்களில் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டவர். அதே சிரிப்போடு பாலிவுட் சினிமாவில் பிரபலமானர்.

ஷாருக்கான்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஒரு காலத்தில் டிவி சீரியல் நடிகராக இருந்தவர்தான். சினிமாவில் அறிமுகமாக சூப்பர் ஸ்டார் அளவிற்கு உயர்ந்துள்ளார். பழைய பாசத்தோடு மீண்டும் டிவியில் கோன் பனேகா குரோர்பதி நடத்துகிறார்.

வித்யா பாலன்
கமெடி சீரியல் ஒன்றில் நடித்த வித்யா பாலன் எதிர்பாரத தருணத்தில் சினிமாவில் நுழைந்தார். இன்றைக்கு பிரபல நடிகையாக உயர்ந்துள்ளார்.

பிராய்ச்சி தேசாய், யாமி கௌதம்
பாலிவுட் உலகில் இன்றைக்கு பிரபல நாயகிகளாக இருக்கும் பிராச்சி தேசாய், யாமி கௌதம் டிவி சீரியல் நாயகிகள்தான்.

நீலிமா ராணி
தமிழ் டிவி சீரியலில் நடித்து பிரபலமான நீலிமா ராணி சினிமாவில் தங்கை கதாபாத்திரங்களில் நடித்தார். தன்னுடைய ஸ்டைலை மாற்றிக்கொண்டு ஹீரோயினாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











