2013ல் சின்னத்திரைக்கு வந்த சினேகா, லைலா, நீனு, சங்கீதா....அபிராமி!

By Mayura Akilan

சினிமாவில் 2013ம் ஆண்டு பல புதுமுக நடிகைகள் வந்துள்ளனர். அதேபோல சினிமாவில் இருந்து சின்னத்திரைக்கு அறிமுகமான நடிகைகள் இல்லத்தரசிகளின் வரவேற்பை பெற்றுள்ளனர்.

சீரியலுக்கும், டிவிக்கு நான் வரவே மாட்டேன் என்று கூறிய நடிகைகள் எல்லாம் ஒரு எபிசோடுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் என்று கூறிய உடனே ஓகே சொல்லிவிட்டனர்.

புது சேனல்களில் நடிகைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், டி.ஆர்.பி அதிகரிக்கிறது என்று கருதுவதால் பிரபல சேனல்களிலும் நடுவர்களாக, சீரியல்களில் நடிக்கவும், நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போட்டி போட்டுக்கொண்டு நடிகைகளை அறிமுகம் செய்கின்றனர்.

புன்னகை இளவரசி தொடங்கி காந்தக்கண்ணழகி வரை 2013ம் ஆண்டில் சின்னத்திரையில் அறிமுகமானவர்கள் அதிகம்.

சினேகா

சினேகா

சினிமாவிலும் விளம்பரத்திலும் பிரபலமாக இருந்த சினேகாவிற்கு பிரசன்னா உடனான திருமணத்திற்குப் பின்னர் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லை. சீரியலில் நடிக்க கூப்பிட்ட போது மறுத்து வந்தவர். புதுயுகம் சேனலில் வித்தியாசமான திருமண நிகழ்ச்சி தொகுப்பாளராக களம் இறங்கியுள்ளார்.

லைலா

லைலா

பிரபல நடிகையாக இருந்த போதே திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆனவர் லைலா. சினிமாவை விட்டு ஓதுங்கிய லைலா ராஜ் டிவியில் சூப்பர் டான்சர் நிகழ்ச்சியின் நடுவராக சின்னத்திரையில் இந்த ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.

அர்ச்சனா

அர்ச்சனா

பாலுமகேந்திரா படங்களின் கதாநாயகி அர்ச்சனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அம்மா வாக பல படங்களில் நடித்தார். இப்போது புதுயுகம் சேனலில் சுரேஷ் கிருஷ்ணா தயாரிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.

நீனு கார்த்திகா

நீனு கார்த்திகா

நீனு கார்த்திகா மலையாள படங்களில் நாயகியாக நடித்து வந்தார். இப்பொழுது ஜெயா டிவியில் வைதேகி சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

சோனியா அகர்வால்

சோனியா அகர்வால்

காதல் கொண்டேன் படத்தில் அறிமுகமான சோனியா அகர்வால் செல்வராகவனை திருமணம் செய்து கொண்ட பின்னர் நடிப்பதில் இருந்து ஒதுங்கினார். சில ஆண்டுகளில் விவாகரத்துக்குப் பின்னர், மீண்டும் நடிக்கத் தொடங்கினார் புதுயுகம் சேனலில் மல்லி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

சங்கீதா

சங்கீதா

சின்னத்திரையில் நடனநிகழ்ச்சிகளில் நடுவராக வந்த சங்கீதா புதுயுகம் சேனலில் நட்சத்திரங்களை சுவாரஸ்யமாக பேட்டி எடுக்கிறார்.

அபிராமி

அபிராமி

வானவில், மிடில்கிளாஸ் மாதவன் போன்ற படங்களில் நடித்த அபிராமி கமலின் விருமாண்டி படத்தின் மூலம் பிரபலமானார். அமெரிக்காவில் செட்டில் ஆன அபிராமி, அதே கமல் படமான விஸ்வரூபம் படத்தில் நாயகி பூஜா குமாருக்கு பின்னணி குரல் கொடுத்தார். இப்போது புதுயுகம் சேனலில் ரிஷி மூலம் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகியுள்ளார்.

கஸ்தூரி

கஸ்தூரி

தமிழ்நாட்டில் தமிழ் பேசத் தெரிந்த நடிகைகளுக்கு மதிப்பு கொஞ்சம் குறைவுதான். அதனால்தான் குஷ்பும், சிம்ரனும் சினிமாவை அடுத்து சின்னத்திரையில் பிரபலமடைந்துள்ளனர். தற்போது நன்றாக தமிழ் பேசத் தெரிந்த நடிகை கஸ்தூரி புதுயுகம் சேனல் மூலம் வினாவிடை வேட்டை என்ற நிகழ்ச்சியை நடத்துகிறார். அழகான தமிழ் உச்சரிப்பு நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X