மதுமிலா… ஸ்ருதி… ஸ்ருதிகா… வாணிபோஜன் யாரு ரொம்ப அழகு?
சின்னத்திரை சீரியல்களில் அறிமுகமாகும் நிறைய புதுமுக நடிகைகள் சினிமாவில் அறிமுகமானவர்கள். ஓரிரு ஆண்டுகளிலேயே சீரியல்களில் நடிக்க வந்து விடுகின்றனர்.
ஆனால் சில சீரியல் கதாநாயகிகள் நேரடியாக சின்னத்திரைக்கு வந்தவர்கள். சினிமாவைப் போல சீரியல் நாயகிகளுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர்.
இன்றைக்கு சீரியலில் நடிக்கும் நடிகைகளில் யார் ரொம்ப அழகு? அதிகம் அழாமல் ரசிக்க வைக்கின்றனர் என்று ரசிகர்களே பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

மதுமிலா
விஜய் தொலைக்காட்சியில் ஆபிஸ் சீரியலில் லட்சுமியாக நடிக்கும் மதுமிலாவிற்கு தனி ரசிகர்கள் உண்டு. தாயுமானவன் சீரியலிலும் நடித்து வரும் மதுமிலா, புதுயுகம் தொலைக்காட்சியில் அக்னிப் பறவை சீரியலிலும் அசத்தி வருகிறார். சின்னத்திரை ரசிகர்களின் செல்லமாகிவிட்டார்.

நிகிலா ராவ்
வாணி ராணியில் செல்வியாக நடித்து அசத்தும் நிகிலா ராவ் சீரியலுக்கு புதுவரவு. அவ்வப்போது வந்து சென்றாலும் இல்லத்தரசிகளின் மனதில் ஒட்டிக்கொண்டார்.

தங்கமீனாட்சி
சரவணன் மீனாட்சி நாயகி தங்கமீனாட்சியின் ஒரிஜினல் பெயரே மறந்து போகும் அளவிற்கு அந்த கதையோடு ஒன்றிப்போய் நடித்து வருகிறார். இவரது பெயர் ரசிதா என்பதே மறந்துவிட்டது. அந்த அளவிற்கு தங்கமீனாட்சியாகவே மாறிவிட்டார்.

ஸ்ருதிராஜ்
தென்றல், ஆபிஸ் சீரியலில் நடித்துவரும் ஸ்ருதி ராஜ் பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்தால் இல்லத்தரசிகளை கவர்ந்து வருகிறார். ஆபிஸ் சீரியலில் அவரின் ரொமான்ஸ் இளைய தலைமுறை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.

வாணி போஜன்
தெய்வமகள் சீரியலில் அறிமுகமான வாணிபோஜன் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்து சீரியலில் நடிக்க வந்திருக்கிறார். இல்லத்தரசிகள் மத்தியிலும் இளையதலைமுறையினர் மத்தியிலும் இவருக்கு தனி வரவேற்பு உள்ளதாம்.

ஸ்ருதிகா
நாதஸ்வரம் சீரியலின் நாயகி மலர் (ஸ்ருதிகா) என்னதான் மாமியார் திட்டினாலும் அதை பொறுமையாக சமாளிக்கும் திறமையினால் எண்ணற்ற மாமியார்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டுள்ளாராம்.

மகாலட்சுமி
சன் டிவி மட்டுமல்லாது தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களில் நடிக்கும் மகாலட்சுமி இல்லத்தரசிகளின் செல்லம். வாணி ராணி தொடரில் அவர் உடுத்தும் புடவைகளைப் பார்க்கவே தனி ரசிகர்கள் இருக்கிறார்களாம்.


Click it and Unblock the Notifications











