நடனம், இசை பாடல்… 2013ன் டாப் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகள்

By Mayura Akilan

டிவி ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகள் முதல் இளைஞர்கள் ஏன் சில சமயம் முதியவர்கள் கூட பங்கு பெறுகின்றனர். இசைப் போட்டி, நடனப்போட்டி, சமையல் போட்டி, திறமையை வெளிப்படுத்தும் போட்டி என பலவித ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாகிறது.

சன்டிவி, ராஜ்டிவி, ஜீ தமிழ், கலைஞர், ஸ்டார் விஜய், பாலிமர் என பல சேனல்களில் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. ரியாலிட்டி ஷோக்களில் குழந்தைகளில் திறமையை வெளிப்படுத்துவதற்காக அவர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர் என்றும் புகார் எழுந்தாலும் ரியாலிட்டி ஷோக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

2013ம் ஆண்டு பல புதுமையான ரியாலிட்டி நிகழ்ச்சிகளும், கேம் ஷோக்களும் ஒளிபரப்பாகின. அவற்றில் பல முடிந்து போனாலும் சில தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றைப் பற்றி சின்ன ரீவைண்ட்.

சாம்பியன்ஸ்

சாம்பியன்ஸ்

உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையாக மாற்றுத் திறனாளிகள் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி சாம்பியன். சன் டிவியில் ஞாயிறு தோறும் மதியம் 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. வித்தியாசமான இந்த போட்டி நிகழ்ச்சி பெரும்பாலான ரசிகர்களை கவர்கிறது.

சூப்பர் சிங்கர் சீசன் 4

சூப்பர் சிங்கர் சீசன் 4

2013ல் சூப்பர் சிங்கர் சீசன் 4 நிகழ்ச்சியில் 33 பங்கேற்பாளர்கள் பாடினர். அதில் அழகேசன் என்ற 60 வயது முதியவரும் ஒருவர். சூப்பர் 20 வரை வந்த அழகேசனுக்கு தனி ரசிகர்கள் வட்டமே உருவானது. இப்போது சூப்பர் 8 பாடகர்கள் பங்கேற்று பாடி வருகின்றனர். சூப்பர் சிங்கர் சீசன் 4 பட்டத்தினை வெல்லப்போவது யார் என்பது இன்னும் சில வாரங்களில் தெரியவரும். இந்த ஆண்டு சுவாரஸ்யமான சுற்றுக்கள் இடம்பெற்றது சிறப்பம்சம்

சன் சிங்கர்

சன் சிங்கர்

சன் சிங்கர் நிகழ்ச்சி சின்னஞ்சிறு குழந்தைகளின் பாடும் திறமையை வெளிப்படுத்தும் நிகழ்ச்சி. நடுவர்களாக புஷ்பவனம் குப்புசாமி, அனுராதா ஸ்ரீராம் பங்கேற்க, கங்கை அமரன் நிகழ்ச்சியில் பயிற்சியாளராக வருகிறார். குட்டீஸ்களின் பாடல். பங்கேற்பாளர்களின் மனம் நோகாமல் கமெண்ட் சொல்வது நிகழ்ச்சியின் ப்ளஸ் பாய்ண்ட்.

ஜோடி நம்பர் 1 சீசன் 7

ஜோடி நம்பர் 1 சீசன் 7

விஜய் டிவியின் நடன நிகழ்ச்சி ஜோடி சீசன் 6 முடிந்து இப்போது சீசன் 7 தொடங்கியுள்ளது. சீசன் 6 தொகுத்து வழங்கிய டிடி தான் சீசன் 7 ஐயும் தொகுத்து வழங்குகிறார். 6 வது சீசனில் அம்பிகா, ராதா, பூர்ணிமா ஜெயராம் ஆகியோர் நடுவர்களாக வந்து அசத்தினர். அந்த சீசனில் பாதியிலே விட்டுப் போன ஆனந்திக்கு 7 வது சீசனில் வாய்ப்பு வழங்கியுள்ளனர்.

டான்ஸ் தமிழா டான்ஸ்

டான்ஸ் தமிழா டான்ஸ்

ஜீ தமிழ் டிவியில் சிம்ரன் தயாரித்து வழங்கும் நிகழ்ச்சி டான்ஸ் தமிழா டான்ஸ் தமிழா டான்ஸ். வியாழன் மற்றும் வெள்ளி இரவு 9.30 மணிக்கு ‘டான்ஸ் தமிழா டான்ஸ்' நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. நிகழ்ச்சியின் பிரதான நடுவர்களான நடிகை சிம்ரன் மற்றும் நடன இயக்குனர் சின்னி பிரகாஷ் ஆகியோர் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்துக்கின்றனர்.

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2

நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி சீசன் 2

விஜய் டிவியில் கோடீஸ்வர நிகழ்ச்சி மீண்டும் 2013ல் தொடங்கியது. 2 வது சீசனில் நடிகர் பிரகாஷ்ராஜ் தொகுத்து வழங்கினார். ஆரம்பத்தில் விறுவிறுப்பாக தொடங்கிய நிகழ்ச்சிக்கு நாளடைவில் வரவேற்பு குறையவே திடீரென்று முடித்து விட்டனர் தயாரிப்பாளர்கள்.

சூப்பர் டான்சர்

சூப்பர் டான்சர்

ராஜ் டிவியில் நடனத் திறமையை வெளிப்படுத்தும் ரியாலிட்டி ஷோ சூப்பர் டான்சர் ஒளிபரப்பாகிறது. சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த லைலா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று கொஞ்சிக் கொஞ்சி பேசுகிறார்

60 வது நொடி ஆர் யூ ரெடி

60 வது நொடி ஆர் யூ ரெடி

விஜய் டிவியில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற கேம் ஷோ 60 நொடி ஆர் யூ ரெடி. 60 நொடியில் அட்டகாசமான, அசத்தலான விளையாட்டுகளை உற்சாகமாக ஆடினார்கள் சின்னத்திரை நட்சத்திரங்கள். ஈரோடு மகேஷ், பாவனா தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி சட்டென்று முடிந்து போனது.

காபி வித் டிடி

காபி வித் டிடி

விஜய் டிவியில் திவ்யதர்ஷினி பிரபலங்களை பேட்டி காணும் நிகழ்ச்சி இது. சில நேரங்களில் சுவாரஸ்யமாக போனாலும், பல நேரங்களில் காமெடியாகி விடுகிறது. காபி வித் அனுவில் இருந்த சுவாரஸ்யம் கொஞ்சம் மிஸ்ஸிங் என்கின்றனர் தொலைக்காட்சி ரசிகர்கள்.

ஜூனியர் சூப்பர் டான்சர்

ஜூனியர் சூப்பர் டான்சர்

மானாட மயிலாட புகழ் கலா மாஸ்டர் இயக்கி தயாரித்த நிகழ்ச்சி ஜூனியர் சூப்பர் டான்சர். பாலிமர் டிவியில் ஒளிபரப்பானது. இந்த ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் நடுவராக மச்சான் நடிகை நமீதா வந்து மார்க் போட்டார். நடிகை அனுராதாவின் மகள் அபிநயா ஸ்ரீயும், டான்ஸ் மாஸ்டர் பாபியும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர்களாக சின்னத்திரைக்கு அறிமுகம் ஆனார்கள்.

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

நடுவுல கொஞ்சம் டிஸ்டர்ப் பண்ணுவோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் என்ற படத்தின் தலைப்பை வைத்து கேம் ஷோவிற்கு பெயர் வைத்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கேள்வி பதில் வடிவிலான நிகழ்ச்சி இது. இந்த கேம் ஷோ மற்றும் குவிஸ் ஷோவில் பங்கு பெறுபவர்கள் சின்னச்சின்ன மிகவும் சுலபமான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X