திரிஷாவின் ஜாதகத்தில் அந்த யோகம் இருக்கு.. மொத்த நோக்கமும் அதுதான்..சர்ச்சையை பற்றி கவலை இல்லை!

சென்னை: விஜயின் மனைவி சங்கீதா கடந்த வாரம் விவாகரத்து மனு தாக்கல் செய்த நிலையில், சென்னையில் திருமண விழாவில் திரிஷாவுடன் ஒன்றாக கலந்த கொண்டார் விஜய். இது சினிமா பிரபலங்கள், அரசியல் கட்சியினர் இடையே பெரும் பேசுபொருளாகி விவாதத்தை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், திரிஷாவின் ஜாதகத்தில் அந்த யோகம் இருப்பதாக பிரபலம் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து youtube சேனலுக்கு பேட்டி அளித்திருக்கும் சினிமா பத்திரிக்கையாளர் தேனி கண்ணன், ஒரு குடும்பத்தில் நுழைந்து இப்படி எல்லாம் சர்ச்சைகள் சிக்குகிறோமே என்கிற கவலை த்ரிஷாவிற்கு இல்லை. ஏனென்றால் திரிஷாவின் கனவே 'சிஎம்' ஆக வேண்டும் என்பதுதான். அதில் திரிஷா மிகவும் உறுதியுடன் இருக்கிறார். த்ரிஷாவின் ஜாதகப்படி முக்கியமான அரசு பொறுப்பில் இருப்பீர்கள் என ஒரு ஜோசியர் சொல்லியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் திரிஷா அதை நம்பவில்லை. ஆனால், காலம் செல்ல செல்ல, இயல்பாகவே காலம் அதற்குள் அவரை இழுத்து செல்வதை பார்த்த திரிஷா, இது உண்மைதானா என அந்த ஜோசியரை மீண்டும் அழைத்து ஜாதகத்தை காட்டி இருக்கிறார்.

Vijay Trisha
Photo Credit:

திரிஷாவிற்கு கவலை இல்லை: அப்போது அவர், நிச்சயமாக நீங்கள் அரசின் முக்கியமான பொறுப்பில் இருப்பீர்கள் என்றும், தேசியக்கொடி கட்டிய காரில் பயணம் செய்வீர்கள் இது நிச்சயமாக நடக்கத்தான் போகிறது என உறுதியாக சொல்லி இருதுக்கிறார். அதன் பிறகு தான் ஜாதகத்தின் மீதே திரிஷாவுக்கு நம்பிக்கை வந்துள்ளது. அதே நம்பிக்கையுடன் தான் த்ரிஷா பயணம் செய்து வருகிறார். இந்தப் பயணத்தில் யார் குறுக்கே வந்தாலும் அவர்களை விலக்கி விட்டு விட்டு அவர் சென்று கொண்டே இருப்பார்.

Vijay Trisha
Photo Credit:

உறுதியான பெண்: ஜாதகத்தில் சொல்லப்பட்டது உண்மையோ.. பொய்யோ அது வேறு விஷயம். ஆனால் திரிஷா, ஒரு உறுதியான பெண். சினிமாவிலும் அவர் தனது ஆளுமையை நிரூபித்து இருக்கிறார். திரிஷா சினிமாவிற்கு வந்த காலகட்டத்தில் வந்த நடிகைகள் எல்லாம் இப்பொழுது இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டார்கள். ஆனால், தற்போதும் சினிமாவில் ஆளுமையுடனே இருக்கிறார். அப்படி இருக்கும் போது திரிஷாவிற்கு இது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை என சினிமா பத்திரிக்கையாளர் தேனி கண்ணன் அந்த வீடியோவில் பேசி உள்ளார். இதைப்பார்த்த இணைவாசிகள் இப்படி ஒரு விஷயம் இருக்கா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X