Azhagu serial: அழகம்மை குடும்ப கப்பலில் ஓட்டை விழுந்துருச்சே!

சென்னை: சன் டிவியின் அழகு சீரியலில் கட்டுக் கோப்பாய் இருந்த குடும்பம் அழகம்மை, பழனிச்சாமி வாத்தியார் குடும்பம். இதில் பூர்ணா கூட தனக்குப் பிடித்த ரவி அத்தான் தன்னைவிட்டு சுதாவை கல்யாணம் செய்துகிட்டு வந்ததால்தான் குடும்பத்துக்கு கெடுதல் நினைக்க ஆரம்பித்தாள்.

காவ்யா பெரிய லாயர் சகுந்தலா தேவியின் மகன் மதனை காதலித்து திருமணம் செய்து கொண்டதில் ஆரம்பிக்கிறது, அழகம்மை குடும்பத்துக்கு கெடுதல் அந்த வீட்டு பொண்ணுதான் பூர்ணா, அம்மாவுக்கு மதனை அழைச்சுட்டு வர்றதா வாக்கு கொடுத்துட்டு, புருஷன் மகேஷ் வீட்டுக்கு வந்திருக்கா.

ஆனால், குல தெய்வம் கோயிலிலுக்கு போனபோது பெரிய மகன் ரவிக்கு ஆபத்து.அதுவும் அவன் பெண்டாட்டி மூலமா வரப்போகுதுன்னு சாமியாடி குறி சொல்ல, அன்றிலிருந்து பயத்தின் உச்சியில் நிம்மதி இல்லாமல் தவிக்கிறார் பழனிச்சாமி வாத்தியார்.

பெங்களூருக்கு போ

பெங்களூருக்கு போ

ரவியும், சுதாவும் இன்னும் ஒண்ணு சேர்ந்து புருஷன் பொண்டாட்டியா வாழலை. இப்போதான் வாழலாம்னு ஆரம்பிக்கையில் ,பூர்ணா சேர விடாமல் கெடுத்துடறா. இந்த நேரத்துல பூர்ணாவுக்கு அல்வா சாப்பிடற மாதிரி, பழனிச்சாமி ஒரு விஷயம் சொல்றா.ரவி நீ மட்டும் கிளம்பி பெங்களூரு போ.அங்கே என் நண்பன் உனக்கு வேலை பார்த்து வச்சிருக்கான்னு.

தனியார் வேலைக்கு மாட்டேன்

தனியார் வேலைக்கு மாட்டேன்

என்னப்பா நீங்க..இன்கம்டேக்ஸ் ஆஃபீசரா இருக்கேன்.கொஞ்சம் காலம் சஸ்பென்ட் பண்ணி வச்சு இருக்காங்க. அதுவும் தப்பு நான் செய்யலைன்னு தெரிஞ்சா உடனே வேலை கிடைச்சுட போகுது . தனியார் வேலைக்கு நான் எதுக்குப்பா போகணும்னு கேட்கறான். என்னையே எதிர்த்து பேசறியான்னு அடிக்க போறார் பழனிச்சாமி.பூர்ணாவுக்கு இதெல்லாம் பார்க்க சந்தோஷமா இருக்கு.

நீங்க சரியில்லை ரவிப்பா

நீங்க சரியில்லை ரவிப்பா

சாமியாடி குறி சொன்னதிலிருந்து நீங்க சரி இல்லை ரவிப்பா.என்ன சொன்னார்னு கேட்டாலும் சொல்ல மாட்டேங்கறீங்க. சரி நீங்களா சொல்லட்டும்னு விட்டுட்டேன். இப்போ சொல்லுங்க ரவிப்பா என்னதான் சொன்னார்னு கேட்க, அவர் அழகுவிடம் சொல்றார். எத்தனை நாளைக்கு ரவிப்பா இப்படி பயந்து பயந்து வாழறதுன்னு அழகம்மை கேட்கறாங்க.

ஒரு ஓட்டை

ஒரு ஓட்டை

ஆனா, சகுந்தலா தேவி, பூர்ணா ரெண்டு பேரும் போட்ட கணக்கு சரியாகி, காவ்யா மதனை அழைச்சுக்கிட்டு, சகுந்தலா தேவி வீட்டுக்கு போறா.அதனாலதான் சொன்னது அழகம்மை குடும்ப கப்பலில் ஒரு ஓட்டை விழுந்துருச்சுன்னு

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X