விஜய் டி.வி. விருது, வீரம் திரைப்படம்: மக்களை கவர்ந்த நிகழ்ச்சி எது? டி.ஆர்.பி ரேட்டிங் வெளியானது!

By Veera Kumar

சென்னை: விஜய் டிவி விருதுகள் மற்றும், சன் டிவியில் ஒளிபரப்பான வீரம் திரைப்படம் அஜீத், விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் கவுரவ பிரச்சினையாக வெடித்தது. இந்நிலையில் இரு நிகழ்ச்சிகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங் வெளியாகியுள்ளது. இதன்படி எந்த நிகழ்ச்சி மக்களை அதிக அளவு சென்று சேர்ந்தது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மாதம் 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை, விஜய் டிவியில், சினிமா விருது வழங்கும் விழாவின் இரண்டாம் பாகம் காண்பிக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய்க்கு, தலைவா படத்துக்காக ஃபேவரைட் ஹீரோ விருது அளிக்கப்பட்டது. அதே நேரத்தில் சன் டி.வி.யில் அஜீத் நடித்த புத்தம் புதிய திரைப்படமான 'வீரம்' காண்பிக்கப்பட்டது.

வரிந்து கட்டிய அஜீத், விஜய் ரசிகர்கள்

வரிந்து கட்டிய அஜீத், விஜய் ரசிகர்கள்

விஜய் விருதுகள் நிகழ்ச்சியை முறியடிக்கும் வகையில் வீரம் காண்பிக்கப்படுவதாக நம்பிய அஜீத் ரசிகர்கள், #VEERAM_TheCheckMateFromSunTv என்ற ஹேஸ்டேக் உருவாக்கினர். ட்விட்டரில் இது டிரெண்டாகவும் ஓடியது. அஜீத் ரசிகர்கள் இந்த ஹேஸ்டேக்கில் கருத்துக்களை தட்டி விட்டுக்கொண்டிருந்தனர். இதற்கு போட்டியாக #VIJAYFavHeroForever என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கிய விஜய் ரசிகர்கள், தங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக கருத்து யுத்தம் நடத்தினர்.

அடுத்த வாரமும் அக்கப்போர்

அடுத்த வாரமும் அக்கப்போர்

இதேபோல கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, மீண்டும் அஜீத், விஜய் ரசிகர்கள் புதிய ஹேஸ்டேக்குடன் களமிறங்கினர். விஜய் ரசிகர்கள் #VIJAY_DarlingofMasses என் ஹேஸ்டேக்கையும், அஜீத் ரசிகர்கள் #22YearsOfSelfMadePhenomAJITH என்ற ஹேஸ்டேக்கையும் உருவாக்கினர்.

எந்த நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள்..?

எந்த நிகழ்ச்சியை பார்த்திருப்பார்கள்..?

இப்படியாக ஞாயிற்றுக்கிழமைகளில் டிவிட்டரை ரணகளப்படுத்தி வந்தனர், அஜீத் மற்றும் விஜய் ரசிகர்கள். சரி.. அப்படி எத்தனை பேர்தான் விஜய் விருதுகளையும், எத்தனை பேர் வீரம் படத்தையும் பார்த்திருப்பார்கள் என்று ரசிகர்கள் அல்லாத அணிசேரா மக்களும் தலையை பிய்த்துக்கொண்டிருந்தனர்.

டி.ஆர்.பி ரேட்டிங் வெளியானது

டி.ஆர்.பி ரேட்டிங் வெளியானது

இந்நிலையில்தான் அந்தந்த வாரங்களுக்கான தொலைக்காட்சிகளின் டி.ஆர்.பி ரேட்டிங் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, வீரம் மற்றும் விஜய் டி.வி. விருது வழங்கும் நிகழ்ச்சிகளுக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கும் வெளியாகியுள்ளது.

தலைநகரில் 'தல' சாம்ராஜ்யம்

தலைநகரில் 'தல' சாம்ராஜ்யம்

ஜூலை 27ம்தேதி ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை எந்த சேனல் அதிகமாகப் பார்க்கப்பட்டது என்ற நிலவரம் அந்த டி.ஆர்.பி மூலமாக தெரியவந்துள்ளது. சென்னை நகர டி.ஆர்.பி நிலவரப்படி விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 11 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன.

தமிழக நிலவரம்

தமிழக நிலவரம்

தமிழ்நாடு அளவில் விஜய் டி.விக்கு டி.ஆர்.பியில் 10 புள்ளிகளும், சன் டி.விக்கு 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. அப்படியானால் சென்னை மண்டலத்தில் வீரம் அதிகம் பேராலும், கிராமங்களையும் உள்ளடக்கிய ஒட்டுமொத்த தமிழக அளவில் விஜய் டி.வி விருதுகளுக்கு அதிக டி.ஆர்.பியும் கிடைத்துள்ளது.

விஜய்க்காகவா, விஜய் டிவி பார்த்தார்கள்?

விஜய்க்காகவா, விஜய் டிவி பார்த்தார்கள்?

டி.ஆர்.பி ரேட்டிங் அடிப்படையில், வெற்றிபெற்றது அஜீத்தா, விஜய்யா என்று பார்க்க முடியாது. காரணம், விஜய் டிவியில் விஜய் சிறிது நேரம்தான் தலைகாட்டினார். விஜய் டிவியை பார்த்த ரசிகர்கள், கமல்ஹாசன் உள்ளிட்ட விருது விழாவில் குவிந்திருந்த வேறு கலைஞர்களுக்காகவும் அதிக நேரம் பார்த்திருக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் சன் டி.வியில் ஒளிபரப்பான வீரம் திரைப்படம், முழுக்க அஜீத்தை, மாஸ் ஹீரோவாக மையப்படுத்தி எடுக்கப்பட்டது. எனவே நடிகர் அடிப்படையில் ஒப்பீடு தேவையற்றது.

சிங்கம்-2

சிங்கம்-2

இதேபோல 20ம் தேதி ஒளிபரப்பான விஜய் டி.வியின் 'விஜய் விருதுகள்' நிகழ்ச்சியின் முதல் பாகத்துக்கான டி.ஆர்.பி ரேட்டிங்கும் வெளியாகியுள்ளது.

அன்றைய தினம் விருது நிகழ்ச்சிக்கு போட்டியாக ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த 'சிங்கம் 2' திரைப்படம் சன்.டி.வியில் ஒளிபரப்பட்டது. அன்றைய டி.ஆர்.பி நிலவரப்படி விஜய் டி.விக்கு சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 13 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றன. சன் டி.விக்கு சென்னையில் 11 புள்ளிகளும், தமிழ்நாட்டில் 9 புள்ளிகளும் கிடைத்திருக்கின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X