டிவி நடிகர் தற்கொலை: ஒரு பெண் கொலை செய்ததாக தந்தை குமுறல்
மும்பை: டிவி நடிகர் ராகுல் தீக்சித் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்தவர் ராகுல் தீக்சித்(28). அவர் நடிக்கும் ஆசையில் ஜெய்பூரில் இருந்து மும்பை வந்து ஓஷிவாரா பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார்.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ராகுல்
ராகுல் தீக்சித் தன் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது நேற்று காலை தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ்
ராகுல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர் வீட்டில் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை. அவர் ஏன் இந்த முடிவை எடுத்தார் என்பது இன்னும் தெரியவில்லை.
கொலை
எங்கள் மகன் ராகுல் தற்கொலை செய்யவில்லை அது கொலை. ரூபாலி கஷ்யப் என்கிற பெண் தான் என் மகனை கொலை செய்துவிட்டார். ராகுலின் உடம்பில் ஆங்காங்கே காயங்கள் உள்ளது என்று அவரின் அப்பா மகேஷ் தீக்சித் ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
தண்டனை
எங்கள் மகன் ராகுலின் கொலைக்கு நியாயம் கிடைக்க வேண்டும். ரூபாலி தண்டிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மகேஷ் தீக்சித். நீ ஏன் இந்த உலகை விட்டுச் சென்றுவிட்டாய் ராகுல் என்று கூறி ஃபேஸ்புக்கில் உருக்கமான போஸ்ட் போட்டுள்ளார் மகேஷ்.


Click it and Unblock the Notifications











