எதிரிக்கு கூட இந்த நிலைமை வரக்கூடாது... சோஷியல் மீடியாவில் கலங்கிய 'பாண்டியன் ஸ்டோர்' நடிகர்!

சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ள பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

Pandian Stores Jeeva Emotional பதிவு | என் துரோகிக்கும் இந்த நிலைமை வர கூடாது!

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா வைரஸின் தாக்கம் உலக நாடுகளை பாடாய்படுத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் உலகம் முழுக்க லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் மரணமடைந்துள்ளனர்.

அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் கொரோனா தொற்று இரண்டு அலைகளாக பல்லாயிரக்கணக்கானோரை பாதித்தது.

ஓராண்டு ஆகியும்...

ஓராண்டு ஆகியும்...

தமிழ் சினிமாவிலும் கொரோனா தொற்றுக்கு இளம் நடிகர்கள் முதல் ஏராளமான நட்சத்திரங்கள் மரணமடைந்தனர். பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல சீரியல் நடிகர் ஓராண்டு ஆகியும் தான் படும் வேதனை இன்னும் குறையவில்லை என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பாண்டியன் ஸ்டோர்ஸ்

பிரபல சீரியல் நடிகர் வெங்கட். இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் நடித்தார். இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலிலும் நடித்து வருகிறார். அவர் பதிவிட்டிருப்பதாவது, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. ஆனால், அது ஒரு மகிழ்ச்சியான நாள் அல்ல. ஒரு வருடம் முடிந்து விட்டது.

எதிரிக்கு கூட வரக்கூடாது

எதிரிக்கு கூட வரக்கூடாது

இருந்தாலும் இன்னும் அதனுடைய வலி, வேதனை, அழுத்தம், பயம் எதுவும் குறைந்தபாடில்லை. துரோகி மற்றும் எதிரிக்கு கூட இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது. அனைவரும் உங்களை பார்த்துக் கொள்ளுங்கள். இயற்கையாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் உணவுகளை சாப்பிடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

வைரலாகும் பதிவு

நடிகர் வெங்கட்டின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் கொரோனா தொற்றால் தாங்கள் பட்ட வேதனையையும் பகிர்ந்து வருகின்றனர். வெங்கட்டின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X