23 வயசுல தான் முதல் தடவை அந்த பிரச்னையை சந்தித்தேன்.. சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி ஓபன் டாக்!

சென்னை: அஜித் குமாரின் வலிமை படத்தில் அவருடைய டீமில் காவல் அதிகாரியாக நடித்திருப்பார் நடிகை சைத்ரா ரெட்டி. அடுத்ததாக அதே ஆண்டு வெளியான விஷமக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். சின்னத்திரை ரசிகர்கள் கயல் என்றே, சன் டிவியில் நடித்த கயல் சீரியல் லீடு ரோல் கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே சைத்ரா ரெட்டியை அழைத்து வருகின்றனர்.

அடுத்த மாதம் ஜூலை 23ம் தேதி ஆனால், 30 வயதை கடந்து விடுவார் நடிகை சைத்ரா ரெட்டி. பேரழகியான அவரை இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட பேர் ஃபாலோ செய்து வருகின்றனர். ஆரம்பத்தில் கன்னட டிவி தொடர்களில் நடித்து வந்த அவர், தமிழில் தற்போது கலக்கி வரும் நிலையில், ராகேஷ் சாமலா என்பவரை திருமணமும் செய்துக் கொண்டார்.

Tv Actress Chaitra Reddy shares when he initially faces negativity in her recent interview
Photo Credit:

2016ம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடிக்கும் போது தான் சந்தித்த பிரச்னைகள் குறித்து யூடியூப் சேனலுக்கு மனம் திறந்த பேட்டியை கொடுத்துள்ளார்.

பிரியா பவானி சங்கருக்கு பதிலாக: ராஜா ராணி, கல்யாணம் முதல் காதல் வரை உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்த நடிகை பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். அவர், சின்னத்திரையை விட்டு சினிமாவுக்குச் சென்ற நிலையில், அவருக்கு பதிலாக அமித் பார்கவ் ஜோடியாக கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் அறிமுகமானவர் தான் சைத்ரா ரெட்டி.

23 வயதில் நெகட்டிவிட்டி: கன்னடத்தில் சீரியல்களில் நடிக்கும் போது கூட அந்த அளவுக்கு நெகட்டிவிட்டியை சந்திக்கவில்லை. 23 வயதில், தமிழ் மொழியே தெரியாமல் அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்தேன். பிரியா பவானி சங்கருக்கு பதில் யாரு இவர், நடிக்கவே தெரியவில்லை என்றும் நல்லாவே இல்லை என்றும் ஏகப்பட்ட நெகட்டிவிட்டி கமெண்ட்டுகளை போட்டுத் தாக்கினார்கள். ஷூட்டிங் ஸ்பாட்டில் சில நாட்கள் கதறி அழுது இருக்கிறேன் என சோஷியல் மீடியா நெகட்டிவிட்டி குறித்து ஓபனாக பேசியுள்ளார்.

1000 புடவை இருக்கு: கலாட்டா யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், செம கேஷுவலாக தனது வீட்டு பெட்ரூமில் அமர்ந்து துணி மடித்துக் கொண்டே பேசிய சைத்ரா ரெட்டியிடம், ஏகப்பட்ட சேலை இருக்கும் போல தெரியுதே என்றும் ஒரு 1000 புடவை இருக்குமா? என தொகுப்பாளினி கேட்க, இருக்கும் என பதில் அளித்தார். ஆனால், ஒரு முறை பயன்படுத்திய சேலையை அப்படியே தூக்கிப் போட்டு விட மாட்டேன், மீண்டும் மீண்டும் அதே சேலையை பயன்படுத்தும் பழக்கம் உள்ளது. நாம காசு போட்டு வாங்கிய சேலையை நாம தானே பயன்படுத்த வேண்டும் என்றார். திருப்பதிக்கு செல்லும் போதெல்லாம் சிகப்பு கலர் சேலையை பயன்படுத்துவேன் என்றும் தங்க நிற சேலை தனது ஃபேவரைட் என்றும் கூறியுள்ளார்.

கார் இடிச்சிட்டேன்னு பிரச்னை: மதுரவாயல் சாலையில் போகும் போது, என்னுடைய கார் இடித்து விட்டதாக ஒருவர் கார் கதவை தட்டி ரொம்பவே பிரச்னை செய்தார். ஒருமையில் எல்லாம் வாடி போடி என திட்டி கூச்சலிட்டார். என்னோட கார் உரச கூட இல்லை என்பது எனக்குத் தெரியும். அவருடைய வண்டியில் சின்ன டென்ட் தான், என்ன வேணும் என கேட்க, 2000 ரூபாய் கேட்டார். அவ்ளோதானே, அதுக்கு ஏன் இப்படி கத்துறீங்க என நான் தப்பே செய்யவில்லை என்றாலும், அந்த பிரச்னையை சமாளிக்க காசு கொடுத்து விட்டு கிளம்பினேன் என செம இன்னொசன்ட்டாக கூறியுள்ளார் சைத்ரா ரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X