அடுத்த வருஷம் கண்டிப்பா கல்யாணம்: டிவி நடிகை தேவிப்ரியா

By Mayura Akilan

அத்திப்பூக்கள் தொடரில் போலீஸ் ஆக நடித்து அசத்திய தேவிப்ரியா திடீரென ஜோடி தொடரில் நடனமாடி அசத்தினார். பாசமலர் தொடரில் வில்லி அண்ணியாக அறிமுகமாகி இப்போது பாச அண்ணியாக மாறியுள்ளார்.

திருமண விவகாரத்தில் சிக்கலாகி சில ஆண்டுகளுக்கு முன் ஊடகங்களில் அதிகம் அடிபட்ட தேவிப்ரியா சீரியல் நடிப்பில் இருந்து விலகியிருந்தார். இப்போது சிக்கல்கள் தீர்ந்து மீண்டும் சீரியலில் பிஸியாகிவிட்டார்.

சினிமாவில் துணை நடிகையாக வந்த தேவிப்ரியாவால், அதில் நீடிக்கமுடியவில்லை, காரணம் என்னவென்று தனக்கே தெரியவில்லை என்கிறார். அடுத்தவருடம் கண்டிப்பாக திருமணம் செய்து கொள்வேன் என்கிறார். ஒருபிரபல பத்திரிகைக்கு அவர் அளித்துள்ள பேட்டியைப் படியுங்களேன்.

14 வயதில் நடித்தேன்

14 வயதில் நடித்தேன்

குழந்தை திருமண விழிப்புணர்வு பற்றிய படத்தில் நடித்தேன். அதுவே என் சினிமா வாழ்க்கைக்கு வாசலாக அமைந்தது. ராஜீவ்மேனன் மூலமாக மின்சாரக்கனவு படத்தில் அறிமுகமானேன். தொடர்ந்து வாலி, கனவே கலையாதே, வல்லமை தாராயோ, யாமிருக்க பயேமே என பல படங்களில் நடித்துள்ளேன்.

நீடிக்க முடியவில்லை

நீடிக்க முடியவில்லை

இப்போது, விஞ்ஞானி, கத்துக்குட்டி என இரண்டு படங்கள் வெளியாகப் போகிறது. பல படங்களில் நடித்திருந்தாலும், என்னால் சினிமாவில் நீடிக்க முடியவில்லை.

கத்திரிக்கா குழம்பு

கத்திரிக்கா குழம்பு

சூட்டிங் இல்லாத நாட்களில் சமையல்தான் பொழுது போக்கு. எனக்கு சமையலில் ஆர்வம் அதிகம், எண்ணெய் கத்திரிக்கா குழம்பு சூப்பரா வைப்பேன்.

நடனத்தில் ஆர்வம்

நடனத்தில் ஆர்வம்

ஜோடி ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடனமாடி ரன்னராக வரக்காரணம் நடனத்தின் மீது எனக்கு ஏற்பட்ட ஆர்வம்தான்.

டப்பிங் பேசினேன்

டப்பிங் பேசினேன்

சினிமாவில் நடிக்காவிட்டாலும் டப்பிங் பேசியிருக்கிறேன். தாமிரபரணி படத்தில் நதியாவிற்கு டப்பிங் பேசினேன். ஆடுகளம், பொல்லாதவன், அலைபாயுதே என பல படங்களில் டப்பிங் பேசியுள்ளேன்.

டிவி தொடர்களில்

டிவி தொடர்களில்

சினிமா, நடனம், டப்பிங் என பல தளங்களில் இருந்தாலும், டிவி சீரியல்தான் என்னை பிரபலமாக்கியது. சொர்க்கம், அத்திப்பூக்கள், செல்லமே, பாசமலர் தொடர்கள் என்னை பிரபலப்படுத்தியது. கலைமாமணி விருது கிடைக்க காரணமாக அமைந்தது.

2015ல் கல்யாணம்

2015ல் கல்யாணம்

இதுவரைக்கும் கல்யாணத்தின் மீது ஆர்வமில்லாமல் இருந்தது. இப்போது வீட்டில் ஓகே சொல்லியிருக்கிறேன். 2015ல் கட்டாயம் திருமணம் செய்து கொள்வேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X