»   »  சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் டும் டும் டும்

சீரியல் வில்லி ரோஜாவுக்கும் வில்லன் ஈஸ்வருக்கும் டும் டும் டும்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிவி சீரியல் வில்லி ஜெயஸ்ரீ வில்லன் நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். சொந்த பந்தங்கள் மட்டுமே இவர்கள் திருமணத்தில் பங்கெடுத்த நிலையில் ஜனவரி 30ம் தேதி மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாகவும் இதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சின்னத்திரை சீரியல்களில் நடிக்கும் நட்சத்திரங்கள் ஆண்டு கணக்கில் ஒரே சீரியலில் நடிப்பதால் காதல், கல்யாணம் என ஒரே குடும்பமாக மாறுவது சகஜமான விசயம்தான். வம்சம் தொடரில் ரோஜாவாக நடித்து கலெக்டர் அர்ச்சனாவிற்கு டார்ச்சர் கொடுக்கும் ஜெயஸ்ரீ சின்னத்திரை நடிகர் ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இவர்களின் திருமணம், காதல் திருமணம்தான் என்றாலும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜெயஸ்ரீ கை பிடித்துள்ள நடிகர் ஈஸ்வர் சின்னத்திரை ரசிகர்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர்தான். விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் சீரியலில் வில்லனாக நடித்து பிரபலமானவர் ஈஸ்வர். தொடர்ந்து அதேகண்கள், சிவரகசியம், நெஞ்சத்தை கிள்ளாதே, பாவமன்னிப்பு, சித்திரம் பேசுதடி என சுமார் 12 தொடர்களில் நடித்துள்ளார்.

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ

ஈஸ்வர் - ஜெயஸ்ரீ

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கல்யாண பரிசு சீரியலில் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொண்டு பாடாய் படும் ஹீரோவாகவும், கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் டெடரான வில்லனாகவும் நடித்து வருகிறார். ஜெயஸ்ரீயும் முதலில் பாவமன்னிப்பு தொடரில்தான் நடிக்கத் தொடங்கினார். அப்போது இந்த ஜோடிகளுக்கு இடையே கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகிவிட்டதாம்.

வம்சம் ரோஜா

வம்சம் ரோஜா

பாவமன்னிப்பு, உணர்வுகள் தொடரில் நடித்த ஜெயஸ்ரீ இப்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் வம்சம் தொடரில் வில்லியாக நடித்து வருகிறார். இந்த வில்லி கதாபாத்திரம்தான் அவருக்கு ரசிகர்களிடையே அறிமுகத்தைக் கொடுத்துள்ளது.

பரதநாட்டிய கலைஞர்

சீரியல் நடிகை என்பதையும் தாண்டி ஜெயஸ்ரீ ஒரு பரதநாட்டியக்கலைஞர். 5 வயதிலேயே பரதநாட்டிய அரங்கேற்றம் செய்துள்ளார். மானாம மயிலாட தொடரின் முதல் சீசனில் டைட்டில் ஜெயித்தவர் ஜெயஸ்ரீ. எனவே நடனத்தை விரும்பி ரசிப்பவர்களுக்கு ஜெயஸ்ரீயை நிறையவே தெரிந்திருக்கும்.

ரியல் ஜோடியானது

ரியல் ஜோடியானது

ஜெயஸ்ரீயும் ஈஸ்வரும் காதலித்து இப்போது மண வாழ்க்கையில் இணைந்துள்ளனர். இவர்கள் இருவரின் திருமணம் நேற்று சென்னை திருவான்மியூரில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இது காதல் மற்றும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்ட திருமணம் என்கின்றனர். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே பங்கேற்றார்களாம். ஜனவரி 30ம் தேதி கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள மிகப்பெரிய ஹோட்டலில் நடைபெற உள்ள ரிசப்சனில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எப்படியோ சீரியல் வில்லன் வில்லி நிஜவாழ்க்கையில் ஹீரோ ஹீரோயின் ஆகிவிட்டனர்.. வாழ்த்துக்கள்.

English summary
Vamsam tv serial actress jayashri yesterday celebrated her marriage with actor Eswar at Tiruvanmiyur. chennai.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil