சினிமா தராத பாப்புலாரிட்டியை சீரியல் கொடுத்துவிட்டது: 'உதிரிப்பூக்கள்' மானஸா
சன் டிவியில் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகும் உதிரிப்பூக்கள் தொடரில் சக்தியாக நடிக்கும் மானஸா, நடிகர் விக்ராந்தின் மனைவி. இவர் தெலுங்கு, மலையாளம் சினிமாக்களில் கதாநாயகியாக நடித்தவர்.
விக்ராந்த் உடனான திருமணத்திற்குப் பின்னர் எதைப்பத்தியும் யோசிக்காமல் குடும்பம், குழந்தை என்று செட்டில் ஆனவர் ஒரே பையன் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் மீண்டும் மீடியாவில் நுழைந்துவிட்டார்.
முதல் சீரியலான உதிரிப்பூக்கள் 400 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பாகிவருகிறது. அந்த சந்தோசத்தோடு இருந்தவருடன் பேசினோம். மகிழ்ச்சியோடு நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

ஏன் சோகமான தோற்றம்
கொஞ்சம் சோகம் கலந்த முகம் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்துவிட்டது. சினிமா தராத பாப்புலாரிட்டியை சீரியல் கொடுத்துவிட்டது.

சக்திதான் எல்லோருக்கும் பிடிக்கும்
மானஸா என்பதை விட சக்தி என்றுதான் எல்லோரும் கூப்பிடுகின்றனர். என் பையனுக்கு இப்போ ரெண்டு அம்மா. மனு அம்மா, சக்தி அம்மா என்றுதான் கூப்பிடுவான்.

வீட்டில் வரவேற்பு
மாமியாரும், கணவரும் நான் நடிக்கும் சீரியலை தினமும் பார்க்கின்றனர். இப்போதைக்கு பையன் சின்ன பையனா இருப்பதால அவனுக்கு நிறைய நேரம் ஒதுக்கறேன். கொஞ்சம் வளர்ந்த உடன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிடுவேன்.

நல்லா சாப்பிடுவேன்
எங்கெல்லாம் புதுசு புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கிறாங்களோ அங்கெல்லாம் போய் மூக்குப் பிடிக்க சாப்பிடுறதுன்னா எனக்கு ரொம்ப இஷ்டம். தெருவோர தட்டுக் கடையில இருந்து பெரிய லெவல் ஸ்டார் ஹோட்டல் வரைக்கும் ருசிச்சு சாப்பிடுவேன்.

டயட் டிரை பண்றேன்
நானும் டயட்ல இருக்கணும்னு நினைப்பேன், ரொம்ப வருஷமா ட்ரை பண்றேன் ஆனா முடியலை. சிக்கன் கறி, தோசை நன்றாக சாப்பிடுவேன். மூன்று நேரமும் தோசை சாப்பிடுவேன்.

பொழுது போக்கு
வீட்டில் செல்ல நாய்களை வளர்க்கிறேன். அதுதான் எங்களின் பொழுது போக்கு, வாத்துக்களையும் வளர்ப்பு எனக்கு பிடித்தமானது படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் செல்லப்பிராணிகளுடன்தான் விளையாடுவேன் என்று கூறிவிட்டு விளையாடப்போனார் மானஸா.


Click it and Unblock the Notifications











