பூவே உனக்காக தொடரின் அடுத்த பூவரசி ரெடி.... ராதிகா ப்ரீத்திக்கு பதிலாக நடிக்கும் பிரபல நடிகை
சென்னை : சன் டிவியில் ஒளிப்பரப்பாகிவரும் பிரபல தொடர் பூவே உனக்காக.
இந்தத் தொடரில் பூவரசியாக நடித்துவரும் ராதிகா ப்ரீத்தி தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையடுத்து அடுத்த பூவரசியாக யார் நடிக்க உள்ளார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

வரவேற்பை பெறும் சீரியல்கள்
தொலைக்காட்சிகளில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது நெடுந்தொடர்கள்தான். என்னதான் மண்டையை குழப்பி ரியாலிட்டி ஷோக்கள், நிகழ்ச்சிகள் என்று கொடுத்தாலும், அவை பெறும் வரவேற்பை காட்டிலும் சீரியல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

ரசிகர்களை கவரும் தொடர்கள்
இதற்கும் காட்சி அமைப்புகள் உள்ளிட்டவற்றிற்காக மெனக்கெட வேண்டும். அடுத்தடுத்து திருப்பங்களை கொடுக்க வேண்டும் என்ற பல தலைவலிகள் இருந்தாலும், ரசிகர்களை எளிதாக கவர்ந்து டிஆர்பி ரேட்டிங்கை அள்ள முடியும்.

பூவே உனக்காக தொடர்
இந்நிலையில் சன் டிவியில் பிரபல தொடரான பூவே உனக்காக தொடர் ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில் தற்போது பூவரசி கேரக்டரில் நடித்துவரும் ராதிகா ப்ரீத்தி விலகியுள்ளார்.

அடுத்தடுத்து விலகிய நடிகர்கள்
முன்னதாக இவருக்கு ஜோடியாக கதிரவன் என்ற கேரக்டரில் நடித்துவந்த அருண் சில காரணங்களால் தொடரிலிருந்து விலகினார். இதேபோல பூவரசிக்கு தோழியாக நடித்துவந்த நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அதிலிருந்து விலகினார். மேற்படிப்பை தொடர்வதற்காக விலகுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

விலகிய ராதிகா ப்ரீத்தி
இந்நிலையில் தற்போது ராதிகா ப்ரீத்தி விலகியுள்ளார். அவரது ரோலில் யார் நடிப்பார்கள் என்ற கேள்வி ரசிகர்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் அவரது கேரக்டரில் புதிய பூவரசியாக அக்னி நட்சத்திரம் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த வர்ஷினி நடிக்கவுள்ளார்.

பூவரசி கேரக்டரில் வர்ஷினி
இதை அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படத்துடன் அறிவித்துள்ளார். இவர் தேர்ந்த பரதநாட்டிய கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. பூவரசி கேரக்டரில் ராதிகா ப்ரீத்தி சிறப்பாக பொருந்தியிருந்தார். ரசிகர்களையும் கவர்ந்திருந்தார். இந்நிலையில் வர்ஷினி ரசிகர்களை பூவரசியாக கவர்வாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











