நடிப்பை விட அதுதான் முக்கியம்.. ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அப்படி.. டிவி நடிகைகளின் இன்ஸ்டா மோகம்!

சென்னை: சோஷியல் மீடியாவில் தற்போது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை உலக நடிகைகளும் ரீல்ஸ்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். திரைப்பட அப்டேட்கள், போட்டோஷூட் வீடியோக்கள், டிரெண்டிங் பாடல்களுக்கு நடனங்கள், ஜிம் வொர்க்அவுட் கிளிப்புகள் என பல வகையான ரீல்ஸ்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

முன்பெல்லாம் நடிகைகள் போட்டோக்கள் மற்றும் திரைப்பட விளம்பர பதிவுகள் மட்டுமே பகிர்ந்து வந்த நிலையில், தற்போது ரீல்ஸ்கள் மூலம் ரசிகர்களுடன் நேரடி தொடர்பை உருவாக்குவதற்காக இளம் நடிகைகள் பலர் தினமும் ரீல்ஸ் வெளியிட்டு மில்லியன் கணக்கில் பார்வையாளர்களை குவித்து வருகின்றனர். இன்ஸ்டாகிராம் அல்காரிதமும் ரீல்ஸ்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால், நடிகைகள் தொடர்ந்து புதிய கண்டென்ட்களை வெளியிட ஆர்வம் காட்டுகின்றனர்.

TV actress Instagram Reels
Photo Credit:

ரீல்ஸ் நடிகைகள்:அந்த வகையில் நடிக்கிறோமோ இல்லையோ ரீல்ஸ் போட்டா போது என சில நடிகைகள் தினமும் வீடியோ போடுவதில் பிஸியாக இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை ஆர்த்தி சுபாஷ் சிந்து பைரவி சீரியலில் நடித்து வரும் இவர் இன்ஸ்டாகிராமில் தினமும் வீடியோவை பகிர்ந்து வருகிறார். அதே போல எதிர்நீச்சல் சீரியலில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மதுமிதா தற்போது அய்யனார் துணை சீரியலில் நடித்து வருகிறார். அவரது தினமும் இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிடுவதையே வாடிக்கையாக வைத்து இருக்கிறார்.


அடுத்ததாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை ஷாலினி ராஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ரீல்ஸ் பிரியரான இவர் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார். இது போல பல நடிகைகள் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே ரீல்ஸ் எடுத்து பகிர, சிலர் ஃபேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் வீடியோக்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். இதன் மூலம் சமூக வலைதளங்களில் அவர்களின் ரசிகர் பட்டாளமும் வேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் பல பிராண்டுகள் கூட ரீல்ஸ் மூலமாகவே நடிகைகளுடன் இணைந்து விளம்பரங்களை வெளியிட ஆரம்பித்துள்ளன. இவ்வாறு இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் உலகில் பிஸியாக இருக்கும் நடிகைகள் குறித்து இணையத்தில் தினமும் புதிய அப்டேட்கள் வைரலாகி வருகின்றன

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X