»   »  ஆடி செவ்வாய்... ஆடி வெள்ளி... டிவியில் வரிசை கட்டும் அம்மன் படங்கள்

ஆடி செவ்வாய்... ஆடி வெள்ளி... டிவியில் வரிசை கட்டும் அம்மன் படங்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆடி பிறந்து 4 நாட்களாகிவிட்டது. தலை ஆடி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளியில் அம்மன் திரைப்படங்கள் களை கட்டி வருகின்றன.

ஆடி மாதம் வந்தாலே அம்மன் ஆலயங்களில் பெண்கள் கூட்டம் அலைமோதும். கூழ் வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வேண்டுதலை நிறைவேற்றுவார்கள். பல பெண்கள் பக்தி மயமாக காட்சியளிப்பார்கள். அவர்களை கவருவதற்காக தொலைக்காட்சி சேனல்களில் அம்மன் படங்கள் ஒளிபரப்பாகின்றன.

TV celebrates the auspicious Tamil month of Aadi with special movie

ஆடி வெள்ளி, பாளையத்தம்மன், ஆதிபராசக்தி, காஞ்சி காமாட்சி என திரைப்படங்கள் வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் வரிசையாக ஒளிபரப்பாகி வருகின்றன.

பக்தி மனம் கமழ கமழ இல்லத்தையே கோவிலாக மாற்றி விட்டன தொலைக்காட்சிகள். வீட்டில் மத்தியான நேரத்தில் சாப்பிட்டு விட்டு இறையருளோடு ராஜ் டிவி, சன்டிவியில் அம்மன் படங்களை பார்த்து ரசிக்கின்றனர் இல்லத்தரசிகள்.

English summary
Aadifestival is celebrated for the birth of the Tamil month of Aadi. Raj TV has line-up popular spiritual and fantasy movie titles that are based on the stories of Goddess Amman and various avathars of Amman

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil