சூப்பர்ஸ்டார் பிறந்தநாள்: டிவியில் எங்கெங்கு காணினும் ரஜினி....
இன்று சூப்பர்ஸ்டார் ரஜினியின் 64வது பிறந்தநாள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டாடிக் கொண்டிருக்க, தமிழ்த் தொலைக்காட்சிகள் அனைத்தும் சொல்லி வைத்த மாதிரி ரஜினியின் சூப்பர் திரைப்படங்களை ஒளிபரப்பி கொண்டாடிக் கொண்டிருக்கின்றன.
வேலைகள் முடிந்து மதிய நேர ஓய்வை டிவியைப் பார்த்தபடியே கழிக்கலாம் என டிவியை ஆன் செய்த குடும்பத் தலைவிகளுக்கு இன்ப அதிர்ச்சி. எந்த படத்தைப் பார்ப்பது, எதை விடுவது என திக்கு முக்காடிப் போயிருக்கிறார்கள்.
காரணம் எல்லா தமிழ்ச் சேனல்கலிலும் சூப்பர்ஸ்டாரின் முத்துக்கு முத்தான தமிழ்ப் படங்கள்.

சன் டிவியில் படிக்காதவன்...
ரஜினியின் பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில், கடந்த திங்கள் முதலே சன் டிவியில் இரவுக் காட்சிகளாக சூப்பர்ஸ்டாரின் ஸ்பெஷல் என ரஜினியின் படங்களைத் தான் ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்றைய மதிய நேரத்து படமாக, ரஜினியின் படிக்காதவன் படத்தை ஒளிபரப்பி உள்ளனர்.

ஜெயா டிவியில் கொடி பறக்குது...
ஜெயா டிவியில் ரஜினியின் பிறந்தநாள் சிறப்புத் திரைப்படமாக கொடி பறக்குது படம் ஒளிபரப்பப் படுகிறது.

ஜெயா மூவிஸில் அவர்கள்....
ஜெயா மூவிஸ் சேனலில் ரஜினி, கமல், ரவிக்குமார் மற்றும் சுஜாதா நடிப்பில் வெளிவந்த அவர்கள் திரைப்படம்.

கலைஞரில் எஜமான்...
கலைஜர் டிவியில் ரஜினி, மீனா மற்றும் ஐஸ்வர்யா நடித்த எஜமான் படம் ஒளிபரப்பாகிறது.

ராஜ் டிவியில் அண்ணாமலை....
ராஜ் டிவியில் ரஜினி, குஷ்பு நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய அண்ணாமலை திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

கே டிவியில் அன்புக்கு நான் அடிமை....
கேடிவியில், ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்த அன்புக்கு நான் அடிமை படம் ஒளிப்பரப்பப் படுகிறது.

ஜீ தமிழில் முத்து....
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ரஜினி, சரத்பாபு மற்றும் மீனா நடித்த முத்து படம்.

வசந்த் டிவியில் அன்புக்கு நான் அடிமை...
கேடிவியைப் போலவே வசந்த் டிவியிலும் அன்புக்கு நான் அடிமை படமே ஒளிபரப்பப் படுகிறது.

பாலிமரில் முள்ளும், மலரும்....
பால்மர் டிவியில் ரஜினி, சரத்பாபு மற்றும் ஷோபா நடித்த முள்ளும், மலரும் படம் ஒளிபரப்பப் படுகிறது.

மெகா டிவியில் அடுத்த வாரிசு...
மெகா டிவியில் ரஜினி ஸ்ரீதேவி நடிப்பில் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய அடுத்தவாரிசு திரைப்படம் ஒளிபரப்பாகிறது.


Click it and Unblock the Notifications











