கோலி சோடாவுக்கு போட்டி போடும் டிவி சேனல்கள்...

By Mayura Akilan

விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'கோலி சோடா' படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்திருக்கிறது. ரசிகர்களின் வரவேற்பினை அடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயாராகிவிட்டார் இயக்குநர்.

தியேட்டர்களில் கோலிசோடா படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பினை அடுத்து படத்தின் சேட்டிலைட் உரிமையைப் பெற டிவி சேனல்களிடையை பெருமளவில் போட்டி உருவாகியுள்ளதாம்.

பசங்க பிரபலம்

பசங்க பிரபலம்

'பசங்க' படத்தில் நடித்த ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், சாந்தினி, சீதா மற்றும் பலர் நடிக்க, ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் வெளியான படம் 'கோலி சோடா'. 24ம் தேதி இப்படம் தமிழகம் முழுவதும் வெளியானது.

கோயம்பேடு கதை

கோயம்பேடு கதை

கோயம்பேட்டு மார்க்கெட்டில் ஹோட்டலை நடத்தும் நாலு விடலை பசங்களைச் சுற்றி நகரும் கதைதான் கோலி சோடா. கதை எளிமையானதுதான் என்றாலும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துவிட்டது. காரணம் திரைக்கதையும், பசங்க பாண்டிராஜின் நடிகர்களின் தேர்வும் தானாம்.

நடிகர்கள் சந்திப்பு

நடிகர்கள் சந்திப்பு

கோலி சோடா படம் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடித்த நடிகர் குழுவினர் வியாழக்கிழமை இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

ரசிகர்கள் வரவேற்பு

ரசிகர்கள் வரவேற்பு

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

கோலி சோடா பார்ட் 2

கோலி சோடா பார்ட் 2

ரசிகர்களிடம் பேசிய இயக்குநர் விஜய்மில்டன், ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்-க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

இளம் நடிகர்கள்

இளம் நடிகர்கள்

கோலிசோடாவில் 12 முதல் 16 வயதுக்குட்பட்ட நடிகர்கள்தான் நடித்துள்ளனர். இது குழந்தைகளுக்கான படம். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் லிங்குசாமி தயாரித்துள்ள இப்படத்திற்க பசங்க பாண்டிராஜ் வசனம் எழுதியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X