தொலைக்காட்சிகளில் விஜய் படங்கள்: போட்டி போட்டு ஒளிபரப்பிய சேனல்கள்

By Mayura Akilan

அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்பதில் பல சர்ச்சைகள் இருக்கலாம். விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பதை பலரும் ஏற்றுக்கொள்ளலாமல் இருக்கலாம். ஆனால் கடந்த சனி, ஞாயிறுகளில் டிவி சேனல்கள் அனைத்தும் விஜய் நடித்த படங்களைப் போட்டு கொண்டாடிவிட்டன.

ஞாயிறன்று எந்த சேனலை திருப்பினாலும், விஜய் நடித்த படங்கள்தான். கடந்த வாரம்தான் விஜய் தனது 40 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

நடிகர்கள் பிறந்தநாள் என்றாலே அவர்கள் நடித்த படங்கள், திரைப்படப்பாடல்களை அன்றைய தினம் முழுவதும் டிவி சேனல்கள், எப்.எம். ரேடியோக்களில் ஒளிபரப்புவது வழக்கம். சூப்பர் ஸ்டார் ரஜினி, உலகநாயகன் கமல், அஜீத், விஜய் ஆகியோரின் பிறந்தநாளை ஊடகங்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய் சிறப்பு நிகழ்ச்சிகள்

விஜய் சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜூன் 22ம் தேதி ஞாயிறன்று விஜய் தனது 40 வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டன.

சன்டிவி, கேடிவி

சன்டிவி, கேடிவி

இந்த ஞாயிறன்றும் சன் குழும நிறுவ தொலைக்காட்சிகளில், விஜய் நடித்த திரைப்படங்களும், பாடல்களும் ஒளிபரப்பானது. சன் டிவியில் மாலை 6 மணிக்கு போக்கிரி திரைப்படமும், கே டிவியில் மாலை 4.30 மணிக்கு கோயம்புத்தூர் மாப்ளே திரைப்படமும் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

கலைஞர் டிவியில் ஆதி

கலைஞர் டிவியில் ஆதி

சன் டிவி ஒளிபரப்பும் திரைப்படங்களுக்கு போட்டியாகவே ஒவ்வொரு வாரமும் கலைஞர் டிவியில் திரைப்படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகின்றன.

ஜெயா டிவியில் சச்சின்

ஜெயா டிவியில் சச்சின்

விஜய் நடித்த சச்சின் திரைப்படம் ஜெயாடிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

ராஜ் டிவியும் ஆஜர்

ராஜ் டிவியும் ஆஜர்

இந்த போட்டியில் ராஜ்டிவியும் இறங்கியது. தன் பங்குக்கு விஜய் நடித்த வசந்த வாசல் திரைப்படத்தை ஒளிபரப்பியது.

இந்த வாரம் ஏன் டிவி சேனல்கள் அனைத்தும் விஜய் நடித்த திரைப்படங்களை போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பினார்கள் என்ற காரணம்தான் தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X