‘கடலை‘ போட ‘சரவணன் மீனாட்சி‘ சினிமாவுக்கு வர்றாங்க!

By Mayura Akilan

சின்னத்திரையின் பிரபல ஜோடிகளான செந்தில், ஸ்ரீஜா இருவரும் இணைந்து சினிமாவில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி தொடரில் பிரபலமாகியுள்ள இந்த ஜோடி அதே உற்சாகத்தோடு சினிமாவில் அடி எடுத்து வைக்கின்றனர்.

கருப்பசாமி குத்தகைதாரர் திரைப்படத்தை இயக்கிய மூர்த்திதான் இந்த ஜோடியை சினிமாவுக்கு அழைத்து வந்திருக்கிறார். ஏற்கனவே சின்னத்திரையில் பிரபலமான இந்த ஜோடி சினிமாவிலும் வெற்றிக்கொடியை பறக்க விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இந்த ஜோடியை சினிமாவிலும் இணைத்துள்ளார்.

சரவணன் மீனாட்சி ஜோடி நடித்த விளம்பரப்படம் தற்போது பிரபலமடைந்ததைப்போல இவர்கள் நடிக்கும் சினிமாவும் ரசிகர்களைக் கவரும் என்று எதிர்பார்க்கலாம்.

மதுரையில் தொடங்கிய ஜோடி

மதுரையில் தொடங்கிய ஜோடி

இப்போது சரவணன் மீனாட்சியாக கலக்கி வரும் மிர்ச்சி எப்.எம் செந்திலும், ஸ்ரீஜாவும் முதன் முதலாக ஜோடி போட்ட சீரியல் மதுரை. விஜய் டிவியில் இந்த சீரியல் வெளியானபோதே இந்த ஜோடி பிரபலமடைந்தது. அந்த சீரியலில் சரவணன் மீனாட்சி என்ற பெயரில் இந்த ஜோடி நடித்தனர். இப்போது அதே பெயரில், அதே ஜோடியை வைத்தே சீரியலை தொடங்கிவிட்டார் இயக்குநர்.

கண்ணு படப்போகுதுங்க

கண்ணு படப்போகுதுங்க

சரவணன் மீனாட்சி தொடரில் இந்த தம்பதியரின் நடிப்பு நிஜ தம்பதியரே ஆச்சரியப்படும் வகையில் அமைந்துள்ளது. இந்த ஜோடியின் அந்நியோன்யமான நடிப்பு அநேகம் பேரை கவர்ந்துள்ளது.

விளம்பரத்திலும் ஜோடி சேர்ந்தாச்சு

விளம்பரத்திலும் ஜோடி சேர்ந்தாச்சு

சரவணன் மீனாட்சி ஜோடி இணைந்து ஊர்வசி சோப் விளம்பரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த விளம்பரமும் இப்போது பிரபலமாக பேசப்படுகிறது.

கடை திறப்பு விழாவுக்கு

கடை திறப்பு விழாவுக்கு

இந்த ஜோடிக்கு இருக்கும் மவுசைப் பார்த்து காதுகுத்து, கடைதிறப்பு விழா என்றெல்லாம் அழைப்பு வருகிறதாம். ஆனால் அதற்கெல்லாம் ஒகே சொல்லாத ஜோடி இப்போது சினிமாவில் ஜோடி போட ஒத்துக்கொண்டுள்ளனர்.

சினிமாவில் ஜோடி சேர்றாங்க...

சினிமாவில் ஜோடி சேர்றாங்க...

கருப்பசாமி குத்தகைதாரர்' என்ற படத்தின் மூலம் மீனாட்சியை திரைக்கு கொண்டு வந்த மூர்த்தி, அதே மீனாட்சி சாயலில் இருக்கும் இந்த மீனாட்சியை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்கிறார். தனியா வேண்டாம் ஜோடியாக நடிங்க என்று பேசி நடிக்க வைத்திருக்கிறார் மூர்த்தி.

‘கடலை’போட ரெடி

‘கடலை’போட ரெடி

இந்த படத்திற்கு 'கடலை' என்று பெயர் வைத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை ஒரே கடலைதானாம். இதற்கு மூர்த்தி ஆக்சன் சொல்ல வேண்டாம் அவங்களே கடலை வறுக்க ஆரம்பிச்சிருவாங்க. ஆனா கருகிப் போயிறாம வறுக்கவேண்டியது இயக்குநரின் பொறுப்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X