ஒரு ஃப்ளாஸ் நியூஸ்… நியூஸ் ரீடர் காவேரிக்கு கல்யாணம்…
அழகாக இருப்பவர்கள் டிவி ஆங்கராகவேண்டும் என்று ஆசைப்படுகையில் செய்திவாசிப்பாளராகத்தான் இருப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் சன்நியூஸ் சேனலின் இளம் செய்திவாசிப்பாளர் காவேரி.
எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் பிகாம் கார்ப்பரேட் செகரேட்டரியேட்ஷிப் படிக்கும் பெண்ணுக்கு நியூஸ் வாசிப்பாளர் பணி என்பது கொஞ்சம் சுமையானதுதான். ஆனால் கல்லூரி படிப்பை விட செய்திவாசிப்பதுதான் சுகமானது என்கிறார் காவேரி.
ஒரு ரிலாக்ஸ்ஆன தருணத்தில் நம்மிடையே பேசினார் காவேரி. தன்னுடைய அழகான பயணத்தை... எதிர்கால லட்சியத்தை பகிர்ந்து கொண்டார்.

வடசென்னை பொண்ணு நான்…
திருவெற்றியூர் ஏரியா பொண்ணு நான்.. வடசென்னையில பிறந்து இப்போ தென் சென்னையில படிச்சிக்கிட்டே வேலை பார்க்கிறேன். காலை 6.30 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பினால் வீட்டுக்குப் போக இரவு 10.30 மணியாகிவிடுகிறது. படிப்பு, செய்தி வாசிப்பது என ஜாலியாக போகிறது வாழ்க்கை.

அக்காவின் தயவில்…
அக்கா கல்யாணி செய்தி வாசிப்பாளர். வேடிக்கைப் பார்க்கப் போய் இப்போது நானும் செய்தி வாசிப்பாளராகிவிட்டேன். விளையாட்டாக ஆரம்பித்தது இப்போது வாழ்க்கையாகிப்போனது. இதனால் பிரபலமானது பெருமையாக இருக்கிறது. ஆனால் நேரில் பார்ப்பவர்களுக்கு சட்டென்று அடையாளம் தெரியாது.

பாசக்கார மக்கள்
எங்கள் ஏரியா மக்களிடம் நான் பிரபலமாகிவிட்டேன். அதேபோல சொந்தக்காரர்கள் என்னைப் பாராட்டும் போது சந்தோசமாக இருக்கிறது. இதற்காகவாவது இன்னும் 20 வருடத்திற்கு செய்தி வாசிப்பாளராக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

சீரியல், சினிமாவுக்கு நோ
செய்தி வாசிப்பாளராக இருப்பதில் கிடைக்கும் மரியாதை, சீரியல், சினிமா என்று போனால் கிடைக்குமா என்று தெரியவில்லை அதனால் இப்போதைக்கு சீரியல் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதேபோல் சினிமா வாய்ப்புகளையும் மறுத்துவிட்டேன்.

நான் கடைக்குட்டி
வீட்டில் நான்தான் கடைசிப்பெண் அதனால் செல்லம் அதிகம். அம்மா, அப்பா இரண்டு அக்கா, ஒரு அண்ணன். அக்காக்களுக்கும், அண்ணனுக்கும் திருமணமாகிவிட்டது. என்னோட ரூட் கிளியர்.

நானும் கல்யாணப்பெண்தான்
எனக்கு செப்டம்பரில் திருமணம்... நந்தனம் அரசுக் கல்லூரியில் ஆங்கில லெக்சரர்ஆக இருக்கிறார். இது லவ் கம் அரேஞ்சுடு மேரேஜ். போன பிப்ரவரியின்தான் பார்த்தோம். இதோ செப்டம்பரில் திருமணம். இன்விடேசன் கொடுப்பேன் அவசியம் வரணும். இனி படிப்பு, வேலை, குடும்பம் என மூன்றையும் கவனிக்கவேண்டும் என்று கூறி வெட்கப்பட்டார் காவேரி. கல்யாணப் பெண்ணிற்கு வாழ்த்துக்கள் கூறி விடைபெற்றோம்.


Click it and Unblock the Notifications











