குடும்ப பஞ்சாயத்தை தீர்க்கும் பாண்டியராஜனின் டாக் இட் ஈஸி "

By Mayura Akilan

வாழ்க்கையில் பிரச்சனை என்பது ஒரு ஊசி. அதை மழுங்கடிக்கணும்னா டாக் இட் ஈஸி என்கிறார் பாண்டியராஜன். புதுயுகம் சேனலில் இவர் நடத்தும் டாக் இட் ஈஸி குடும்ப பஞ்சாயத்தை தீர்க்கும் நிகழ்ச்சி.

சுட்டிகள் முதல் பாட்டிகள் வரை செல்லச் சண்டைகளும், ஜாலிச் சீண்டல்களும் இல்லாத குடும்பங்களே கிடையாது. விடிய விடிய மொபைல் கேம்ஸ் ஆடும் மாமியார், அக்கறையோடு அதட்டும் மருமகள்.

TV Programme to solve family issues

என் சுடிதாரை நீ போட்டுக்கக் கூடாது என கோப்படும் டீன்ஏஜ் மகள். போட்டுக்கொண்டால் என்னவாம் எனக் கேட்கும் அம்மா.

என் பாக்கெட்ல இருந்த பணத்தைக் காணோம் எனப் புலம்பும் அப்பா. காபி ஃஷாப் செலவுக்கு நைஸாக அவர் பாக்கெட்டில் கை வைக்கும் மகன்.

கேர்ள் ஃபிரண்டுக்கு செலவு செய்யும் மாணவன். எங்களை ஏண்டா கண்டுக்கல எனப் புலம்பும் நண்பர்கள்.

இப்படி வித விதமான ஜாலியான பிரச்சனைகளுடன் வருபவர்களை, தனது பாணியில் நகைச்சுவையாகப் பேசி சிரிக்கவைத்து பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறார் நடிகர் பாண்டியராஜன். இதுதான் "டாக் இட் ஈஸி" நகைச்சுவை டாக் ஷோ.

"கல்யாணம் ஆகி அஞ்சு வருஷமாச்சு. அவர் கேட்டதையெல்லாம் சமைச்சுக்கொடுக்கிறேன். பிடிச்ச மாதிரி டிரஸ் பண்றேன். ஆனா இன்னைவரைக்கும் வாயைத் திறந்து ஒரு பாராட்டு கிடையாது. சரியா அமுக்கி" என்று செல்லமாகக் கோபிக்கிறார் மனைவி.

"ரசம் சூப்பர்னு ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறேனே அது போதாதா?" என்று குறும்பாகச் சீண்டுகிறார் கணவர்.

"அப்ப இனிமே நான் உங்களுக்கு சமைக்கல. ஃபேஸ்புக்குக்கே சமைச்சுப்போடறேன்" என்று மடக்குகிறார் மனைவி.

இந்த செல்லச் சண்டைக்கு நடிகர் பாண்டியராஜன் என்ன தீர்ப்பு வழங்கினார் என்பது கலகலப்பான சஸ்பென்ஸ். இந் நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 .00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X