திருமணம் சீரியல்ல நடித்து காதலித்து திருமணம் செய்து கொண்ட சூப்பர் ஜோடி.. வாழ்த்தும் ரசிகர்கள்!

சென்னை: சின்னத்திரை நடிகர்கள் சித்து சித் மற்றும் ஸ்ரேயாவின் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர் சித்து மற்றும் ஸ்ரேயாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

திருமணம் சீரியல் மூலம் மக்களின் மனம் கவர்ந்த ரீல் ஜோடிகள் காதலித்து வந்த நிலையில், இன்று முதல் ரியல் ஜோடிகளாக மாறி உள்ளனர். ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாக நடித்து வரும் சித்துவுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் உள்ளனர்.

சித்து ஸ்ரேயா திருமணம்

சித்து ஸ்ரேயா திருமணம்

சின்னத்திரை நடிகர்களான சித்து சித் மற்றும் ஸ்ரேயா ஆஞ்சன் திருமணம் இன்று சென்னையில் உள்ள தனியார் மஹாலில் கோலாகலமாக நடைபெற்றது. குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

திருமணம் சீரியல்

திருமணம் சீரியல்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 2018 முதல் 2020 வரை 500 எபிசோடுகளுக்கும் மேல் வெற்றிகரமாக ஓடிய திருமணம் சீரியலின் ரீல் ஜோடிகள் தான் இன்று ரியல் ஜோடிகளாக திருமணம் செய்து கொண்டு மணமக்களாக மாறி உள்ளனர். சித்து சந்தோஷ் எனும் கதாபாத்திரத்திலும் ஸ்ரேயா ஜனனி எனும் கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தனர்.

காதலித்து திருமணம்

காதலித்து திருமணம்

திருமணம் சீரியலில் ஜோடிகளாக நடித்த இருவரும் கடந்த சில வருடங்களாகவே காதலித்து வந்த நிலையில், தற்போது தங்களின் நீண்ட நாள் கனவான திருமணத்தை கோலாகலமாக நடத்தி முடித்துள்ளனர். பிங்க் நிற சேலையில் மணப்பெண் ஸ்ரேயாவும் பட்டுவேட்டி சட்டையில் மணமகன் சித்துவும் மணமேடையை அலங்கரித்தனர்.

திருமண புகைப்படங்கள்

திருமண புகைப்படங்கள்

சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த சித்து மற்றும் ஸ்ரேயாவின் திருமணம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்ற நிலையில் இருவரது திருமண புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. தாலி கட்டும் புகைப்படம் உள்ளிட்ட ஏகப்பட்ட திருமண சடங்கு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

நட்சத்திர ஜோடியினரை சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் சித்து தற்போது நடித்து வருகிறார். அன்புடன் குஷி சீரியலில் ஸ்ரேயா கடைசியாக நடித்து இருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X