சீரியல் நடிகையின் 14 வயது மகன் மர்ம மரணம்.. கதறி அழும் நடிகை!

சென்னை: பிரபல சீரியல் நடிகையின் 14 வயது மகன் கை மற்றும் கால்கள் உடைக்கப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளான். இதுகுறித்து இருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து, கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.

பாபிஜி கர் பர் ஹை, கிரைம் பேட்ரோல் போன்ற சீரியல்களில் நடித்து பிரபலமானவர் சப்னா சிங் கங்வார். இவரது மகன் சாகர் கங்வார், தாய் மாமன் மற்றும் தாயுடன் வசித்து வந்துள்ளார். திங்கட்கிழமை சாகர் வீட்டில் இருந்த போது,அனுஜ் சிங் மற்றும் சவுத்ரி ஆகியோர் வீட்டுக்கு வந்து கிரிக்கெட் விளையாட அழைத்து சென்றுள்ளனர். நீண்ட நேரம் ஆகியும் சாகர் வராததால் அவரது மாமா அவரை பல இடத்தில் தேடியுள்ளார். அவனை செல் போனில் அழைத்த போது போன் சுவிட்ச் ஆப்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதையடுத்து, இரண்டு நாட்களுக்கு பிறகு அவரது உடல் இசத்நகர் பகுதியில் உள்ள கிராமத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

tv actress son

அதிகபடியான மது: இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இறப்பிற்கான சரியான காரணத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. அவரது உடலில் நச்சுத்தன்மைக்கான தடயங்கள் எதுவும் இல்லை, ஆனால் அதிகப்படியான மது அருந்தி இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், உடலில் காயங்களைத் தவிர வேறு எந்த அடையாளங்களும் இல்லை என்றார். மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய அனுஜ் மற்றும் சன்னியின் மீது ஆதாரங்களின் அடிப்படையில் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கண்ணீர் பேட்டி: மேலும் மகனின் மர்ம மரணம் குறித்து பேசிய நடிகை சப்னா சிங் கங்வார் "என் மகன் இப்போது இல்லை, அவனை சுட்டு, அவரது கை மற்றும் கால்களை உடைத்து, வெட்டி கொலை செய்துள்ளனர். என் குழந்தையை இவ்வளவு கொடூரமாக கொலை செய்ய என்ன காரணம், அவன் யாருக்கு என்ன தீங்கு செய்தான், என் மகனை கொலை செய்தவர்களை போலீஸ் என்கவுண்டரில் கொல்ல வேண்டும் என்று கண்ணீருடன் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X