Don't Miss!
- News
ஒரே பதற்றமா இருக்கு! அரசு விழாவில் தடுமாறிய கரூர் மேயர் கவிதா கணேசன்! கண் சிவந்த செந்தில் பாலாஜி!
- Automobiles
மவுசு துளியளவும் குறையல... மிக குறுகிய காலத்தில் 1.4 மில்லியன் டூ-வீலர்களை விற்பனை செய்த ஹீரோ! தரமான சம்பவம்!
- Lifestyle
இந்த அறிகுறிகள் இருந்தால் ஆண்களுக்கு பாலியல் ஹார்மோன்கள் குறைவாக இருக்குனு அர்த்தமாம்... உஷார்!
- Sports
கேப்டனாக தினேஷ் கார்த்திக்கிற்கு முதல் வெற்றி.. பயிற்சி ஆட்டத்தில் இந்தியா அபாரம்.. முழு விவரம்
- Finance
தங்க கடன் மட்டும் 1 லட்சம் கோடி.. திடீரென தங்க நகையை அடகு வைக்கும் மக்கள்.. ஏன்..?!
- Technology
OnePlus Nord 2T வாங்கலாமா? இல்ல Nothing Phone 1 போனுக்கு வெயிட் பண்ணலாமா? எது பெஸ்ட்?
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
"பிணமா போற உடம்பு; அதை ஏன் தவறாக பார்க்கிறீர்கள்?" - பிரபல டிவி நடிகை ஆவேசம்
சென்னை: சினிமாவில் நடிகைகளை அட்ஜஸ்ட் பண்ணச் சொல்வது குறித்து தொலைக்காட்சி நடிகை ஜீவிதா தனியார் ஊடகப் பேட்டி ஒன்றில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார்.
திறமை இருந்தும் கூட சில நடிகைகளால் சினிமாவில் பெரிய இடத்தை அடைய முடியாமல் போவதற்குக் காரணம் இந்த காஸ்ட்டிங் கவுச் தான் என்றும் ஜீவிதா குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், நடிகைகள் அனைவரும் இது போன்ற அட்ஜஸ்ட்மெண்ட்டுக்கு வர மாட்டேன் எனத் துணிச்சலாகக் கூற வேண்டும் என்றும் ஜீவிதா கூறியிருக்கிறார்.
உதயநிதி உட்காரும்பொழுது, நாற்காலி உடைந்து விட்டது...பதறி போனேன்,சிந்து என்ன செஞ்சாங்க தெரியுமா ?

கிளாமர் ரோலுக்கு நோ
திருமகள், ஆபீஸ், தேவதை, பாசமலர் என பிரபல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் நடிகை ஜீவிதா. அதிலும் திருமகள் தொடரில் ஆனந்தவல்லி என்ற வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து மிரட்டினார். அதன் பின்னர் நடிகர் கார்த்தியின் அக்காவாக கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகை ஜீவிதா சினிமாவில் தனக்கு நேர்ந்த அனுபவங்களை வெளிப்படையாக அப்பேட்டியில் கூறியிருக்கிறார். பொதுவாக தனக்கு கிளாமர் ரோலில் நடிக்கவே வாய்ப்புகள் வருவதாகவும், ஆனால் அவ்வாறு அரைகுறை ஆடையோடு நடிக்க தான் மறுத்துவருவதாகவும் கூறியிருக்கிறார். "என்னைப் பார்த்தா என்ன தோணும்னு எனக்குத் தெரியல. அரைகுறை டிரஸ் போட்டு கிளாமர் ரோல் இருக்கு நடிக்கிறீங்களா? என்று கேட்கிறார்கள் என்று தனது ஆதங்கத்தைத் தெரிவித்திருக்கிறார்.

நமிதா ரோலில் நான்
6 வருடங்களுக்கு முன், மாசாணி என்ற திரைப்படத்தில் என்னை நடிக்க அழைத்தார்கள். முழுக்க முழுக்க கிளாமர் ரோல் என்று கூறினார்கள். அந்த கேரக்டருக்கு காஸ்டியூமே மிகவும் கவர்ச்சியாக இருக்கும் என்றும், அது நமிதா நடிக்க வேண்டிய ரோல் என்று சொன்னார்கள். அப்படியென்றால் என்னை ஏன் அழைக்கிறீர்கள்? என்று கேட்டேன். புதுமுகங்களைத் தேடுகிறோம் அதனால் தான் உங்களை அழைக்கிறோம் என்றார்கள்.நமிதா நடிக்க வேண்டிய ரோல் என்றால், அவருக்குக் கொடுக்கும் 5 லட்சம் சம்பளத்தை எனக்கும் கொடுத்திருக்க வேண்டுமே. ஆனால் என் சம்பளம் மிகவும் குறைவு. பின் எதற்காக அந்த ரோலில் நடிக்க வேண்டும்? என்று யோசித்தேன். நமிதா நடிக்க வேண்டிய ரோலை உனக்கு கொடுக்கிறேன். ஆனால் சம்பளம் மட்டும் பிச்சைக்காரத் தனமாகக் கொடுப்பேன் என்றால் அங்கு ஏதோ தப்பாக இருப்பதாக எனக்குத் தோன்றியது அதனால் மறுத்துவிட்டேன் என்று கூறியிருக்கிறார்.

கார்த்தியுடன் நடித்த அனுபவம்
இதனிடையே, கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்தியின் அக்கா ரோலில் நடித்தது குறித்து ஜீவிதா கூறுகையில், "ஐயோ அது மறக்க முடியாத அனுபவம். சாகும் வரை அந்த வாய்ப்பை என்னால் மறக்கவே முடியாது. 29 ஆர்ட்டிஸ்களுடன் நடித்தது மிக சிறப்பான அனுபவம். நடிகர் இளவரசு சார் மூலமாக தான் அந்த வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இளவரசு சார் தான் எனது புகைப்படத்தை இயக்குநர் பாண்டிராஜிடம் காட்டி அந்த வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். கார்த்தி சார் கூட நடிக்கும் போது உண்மையில் மிகவும் பயந்தேன். அவ்வளவு பெரிய லெஜண்ட் அவர். அதே போல், சத்யராஜ் சார் முன் மிரண்டு போய் நின்னேன். ஏனென்றால் பாகுபலி போன்ற படங்களில் அவர் நடிப்பைப் பார்த்துவிட்டு அவரை நேரில் பார்க்கும் போது ஒருநிமிடம் என்ன நடக்கிறது என சத்தியமாகத் தெரியவில்லை. அப்படி ஒரு அனுபவம் அது. இப்பவும் அதில் என்னுடன் நடித்த அத்தனை பேருடனும் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் என ஜீவிதா தெரிவித்திருக்கிறார்.

பொணமா போற ஒடம்பு
சினிமாவில் பெண்களை அட்ஜஸ்ட்மெண்ட்டுக்காக அழைக்கும் போது, அவர்கள் அந்த வாய்ப்பினை நிராகரிக்க வேண்டும். அது எவ்வளவு பெரிய வாய்ப்பாக இருந்தாலும் அதனை மறுக்க வேண்டும். அப்போது தான் இந்த நிலை மாறும். திறமை உள்ளவர்கள் திறமை இருந்தும் கூட மேலே உயர முடியாமல் போவதற்குக் காரணம் சில பெண்கள் மிக எளிதாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பினைப் பெறுவது தான் என்றும் ஜீவிதா குறிப்பிட்டிருக்கிறார். "பொணமா போற உடம்புங்க இது. அதை ஏன் தப்பா பார்க்குறீங்க? உயிரோடு இருக்குற வரைக்கும் தான் இந்த உடம்ப பெயர் சொல்லி கூப்பிடுகிறோம். அதை ரசிக்கிறோம். இறந்த பின்னர் அது எப்படிப்பட்ட நடிகையாக இருந்தாலும் பிணம் என்று தான் சொல்வார்கள் என்றும் ஜீவிதா கூறியிருக்கிறார்.
-
அப்பாவை மறக்கமுடியாமல் அழுகிறாள் மீனாவின் மகள்..பார்க்கவே பாவமாக இருக்கு..கலங்கும் கலா மாஸ்டர்!
-
நயன்தாராவுக்கு நடந்ததை போலவே.. கடைசி நேரத்தில் லொகேஷன் சேஞ்ச்.. தயாரிப்பாளரை மணந்த ஹாலிவுட் நடிகை!
-
D Block Twitter Review: அருள்நிதி நடிப்பு.. எருமை சாணி விஜய் இயக்கம்.. எப்படி இருக்கு டி ப்ளாக்?