Actress Shabana: ஆர்யனை திருமணம் செய்ய இதுதான் காரணம். சீரியல் நடிகை ஷபானா ஓபன்!

சென்னை: செம்பருத்தி உள்ளிட்ட சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை ஷபானா.

மும்பையை சேர்ந்த இவர், தன்னுடைய முதல் சீரியலான செம்பருத்தி தொடரிலேயே தன்னுடைய நடிப்பால் ரசிகர்களை கட்டிப்போட்டார்.

சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷபானா ஏராளமான ரசிகர்களை இதன்மூலமும் பெற்றுள்ளார்.

நடிகை ஷபானா: கடந்த 2017ம் ஆண்டில் ஜீ தமிழில் துவங்கப்பட்ட செம்பருத்தி சீரியலில் நடிகை ஷபானா பார்வதி என்ற கேரக்டரில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இந்தத் தொடர் டிஆர்பியிலும் அதிக புள்ளிகளை பெற்று முன்னணியில் இருந்தது. இதையடுத்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் மனைவி சீரியலிலும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் ஷபானா. தொடர்ந்து டாப் 5 தொடர்களில் இந்த சீரியல் இடம்பெற்று வருகிறது.

TV Serial Actress Shabana opens up about his Love with Aryan and his marriage

நடிகர் ஆர்யனுடன் காதல் திருமணம்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படும் ஷபானாவிற்கு அதிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்த ஆர்யனை காதலித்து ஷபானா கடந்த ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருடைய திருமண புகைப்படங்கள் அதிகமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இருவரும் ஒன்றாக பதிவிடும் புகைப்படங்களும் தொடர்ந்து கவர்ந்து வருகின்றன.

ஷபானா பேட்டி: நடிகர் ஆர்யன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகிவரும் மீனாட்சி பொண்ணுங்க தொடரில் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் தன்னுடைய குடும்பம் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்துள்ளார் ஷபானா. செம்பருத்தி சீரியலில் இந்து பெண்ணாக நடித்ததற்காகவும் பொட்டு வைத்துக் கொண்டதற்காகவும் தன்னுடைய குடும்பத்தினர் ஒரு ஆண்டுகாலம் தன்னுடன் பேசவில்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆர்யனை திருமணம் செய்ய காரணம்: இந்துப் பையனை திருமணம் செய்யக் கூடாது என்று அவர்கள் தொடர்ந்து அறிவுறுத்திய நிலையில், அதற்காகவே தான் ஒரு இந்து பையனை திருமணம் செய்துக் கொள்ள முடிவெடுத்ததாகவும் ஆர்யனை காதலித்து கல்யாணம் செய்துக் கொண்டதாகவும் ஷபானா தெரிவித்துள்ளார். சின்னத்திரையில் ஆர்யன் -ஷபானா ஜோடி மிகவும் பிரபலமாகவும் ரசிகர்களை கவர்ந்த ஜோடியாகவும் காணப்படுகிறது. இவர்களின் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமீபத்தில் தன்னுடைய கணவர் ஆர்யனின் பிறந்தநாளையொட்டி சமூக வலைதளத்தில் அடுத்தடுத்த புகைப்படங்களை ஷபானா வெளியிட்டிருந்தார். இந்தப் புகைப்படங்களும் ரசிகர்களின் லைக்ஸை பெற தவறவில்லை. ஆர்யனின் மனைவியாக இருப்பதற்காக பெருமை படுவதாக இந்த பதிவின் கேப்ஷனில் குறிப்பிட்டிருந்தார். இந்த வாக்கியத்தில் அனைத்துமே அடங்கிவிடும என்றும் அவர் கூறியிருந்தார். இதையொட்டி அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X