அவங்கதான் பேசிக்கனும்.. இல்லன்னா சண்டை போட்டுக்கனும்.. குக் வித் கோமாளி விஷயத்தில் பேசிய டிவி நடிகை!

சென்னை: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்ட மணிமேகலை நிகழ்ச்சியில் இருந்து விலகும் முடிவை கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக அறிவித்திருந்தார்.

நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட விஜய் டிவி ஆங்கர் தன்னை சிறப்பாக செயல்பட விடவில்லை என்று மணிமேகலை குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து குக்காக செயல்பட்ட பிரியங்காவிற்கு எதிராக பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் நடிகை சரண்யா வெளிப்படையாக பேசியுள்ளார்.

television sharanya

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி: விஜய் டிவியின் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமான இறுதிப் போட்டியுடன் நிறைவடைந்துள்ளது/ இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி ஆங்கர் பிரியங்கா டைட்டிலை வென்றுள்ளார்/ கடந்த நான்கு சீசன்களாக ஏராளமான ரசிகர்களை கவர்ந்து ஸ்ட்ரெஸ் பஸ்டர் என்ற கமெண்டையும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி பெற்றிருந்தது. ஆனால் இந்த 5வது சீசன் பல்வேறு விமர்சனங்களுடன் அடுத்தடுத்து ரசிகர்களை முகம் சுளிக்க வைத்தது. நிகழ்ச்சியில் இடம்பெற்ற மோசமான செயல்பாடுகள் காரணமாக ரசிகர்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து கமெண்ட் செய்து வந்தனர்.

மணிமேகலை -பிரியங்கா விவகாரம்: இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் ஆங்கராக செயல்பட்டு வந்த மணிமேகலையும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறும் முடிவை அறிவித்திருந்தார். மேலும் தான் வெளியேற காரணம் நிகழ்ச்சியில் குக்காக செயல்பட்ட விஜய் டிவியின் ஆங்கர்தான் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். அவர் நேரடியாக கூறவில்லை என்று போதிலும் அவர் குறிப்பிட்டது பிரியங்காவை தான் என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தது. இதையடுத்து அவருக்கு எதிராக பலரும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். மணிமேகலையின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்த நிலையில் பிரியங்காவிற்கு எதிராக பல கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

சீரியல் நடிகை சரண்யா விளக்கம்: பிரியங்காவின் பர்சனல் லைஃபையும் சுட்டிக்காட்டி பலரும் கமெண்ட் செய்தது விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்நிலையில் பிரியங்காவிற்கு ஆதரவாக பேசியவர்களை சொம்புகள் என்று மணிமேகலை கூறியதையும் பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது இந்த விஷயத்தில் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் நடிகை சரண்யா வெளிப்படையாக பேசியுள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடக்கும்போது அவர் அங்கே இருந்துள்ளார். ஆயினும் பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்குள்ளே ஏற்படும் சண்டைக்கு முழு முதல் காரணம் என்ன என்பது குறித்து பார்வையாளர்களாக நமக்கு தெரியாது என்று சரண்யா சுட்டிக்காட்டியுள்ளார்.

sharanya

அவங்களே பேசிக்கனும்: மேலும் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் தயாரிப்பு தரப்பு ஆகியோர் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும் அல்லது சண்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் சரண்யா தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தான் அங்கே இருந்தாலும் எந்தமாதிரியான சூழலில் அவர் இந்த முடிவை எடுத்தார் என்பதுகுறித்து நாம் ஜட்ஜ் செய்ய முடியாது என்றும் சரண்யா தெரிவித்துள்ளார். ஆனால் தான் அங்கே சென்றபோது சூழல் சரியில்லை என்பது மட்டும் தனக்கு தெரிந்ததாகவும் சரண்யா சுட்டிக் காட்டியுள்ளார். முன்னதாக இதே கருத்தை தான் அந்த நிகழ்ச்சியின் கோமாளி புகழும் பேசியிருந்தார். அவர்கள் இருவருக்குள் ஏற்பட்ட பிரச்சனையை அவர்களை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியிருந்தார் இந்நிலையில் சரண்யாவும் அதே கருத்தை பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X