ஓ.... பார்வதி... அழகி நீதானா?

சன்டிவியில் விநாயகர், விஜய் டிவியில் தமிழ் கடவுள் முருகன் ஆகிய புராண தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இந்த தொடர்களில் வரும் பார்வதியில் அழகி யார் என்பதே டிவி ரசிகர்களிடம் போட்டியாக உள்ளது

By Mayura Akilan

சென்னை: பார்வதி... அந்த பரமசிவனின் மனைவி. கடந்த சில வாரங்களாக தொலைக்காட்சி புராண தொடர்களின் மூலம் மக்களின் மனங்களில் இடம் பிடித்து விட்டார். இதில் விநாயகர் தொடரில் வரும் இந்தி நாயகி பார்வதிக்கும், தமிழ் தொடரான முருகன் தொடரில் வரும் பார்வதிக்கும் இடையேதான் போட்டியே.

புராண கதைகளில் அழகான உச்சரிப்பு, நளினம், நடன அசைவுகள் என இரு நாயகிகளுமே சரி சம அளவில் மதிப்பெண்களை அள்ளினாலும், தமிழ் உச்சரிப்பு முருகனின் தாயாருக்கு ஒரிஜினல் என்பதால் அவருக்கு மதிப்பெண் சற்று அதிகமாகவே விழுந்துள்ளது.

பரமசிவனுடனான நெருக்கம் இந்தி பார்வதிக்குத்தான் அதிகம் என்பது அனைவருக்குமே தெரியும். தமிழ் பார்வதிக்கு சற்று நெருக்கம் குறைவுதான்.

அழகிய தமிழ் மகள்

அழகிய தமிழ் மகள்

தமிழ் கடவுள் முருகன் தொடரை பார்த்த உடனே, அட பார்வதியை எங்கோ பார்த்தது போல இருக்கே என்று நினைத்தவர்கள் தொலைக்காட்சிகளில் செய்தி வாசித்த பிரியாதானே என்று சட்டென்று பொறிதட்டியிரும். அதே பிரியாதான் இங்கே பார்வதியாக உருமாறியிருக்கிறார்.

அட நம்ம நந்தகுமார்

அட நம்ம நந்தகுமார்

சன்டிவியில் வம்சம் தொடரில் வில்லனாக நடித்து அசத்திய நந்தகுமார் பரமசிவனாக மாறியிருக்கிறார். நெற்றிக்கண் இல்லாதது ஒரு குறைதான். ஆனாலும் இருவரின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்து விட்டது. சிவனுடன் செல்ஃபி எடுத்து அதை தனது ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார் பார்வதி.

முருகனின் பிறப்பு

முருகனின் பிறப்பு

சூரபத்மனை கொல்ல நெற்றிக்கண்ணில் இருந்து முருகனை உருவாக்குகிறார் சிவன். இது பார்வதிக்கு தெரிய வரவே அனைவருக்குமே சாபம் விடுகிறார். இன்னும் கொஞ்சம் நடிக்கணும் பார்வதி என்று டிவிக்கு முன்னால் இருந்து வாண்டுகள் கூட கிசுகிசுக்கிறார்கள்.

கொஞ்சும் பார்வதி

கொஞ்சும் பார்வதி

அழகன் முருகனை அள்ளி கொஞ்சுவதில் தாய்மை உணர்வு பொங்க நன்றாகவே நடித்திருக்கிறார். அந்த முருகன் நிஜமாகவே அழகன்தான்.

விநாயகர் மகிமை

விநாயகர் மகிமை

சன்டிவியில் விநாயகர் பக்தி காவியத்தில் முதலில் முருகன் பிறப்பை காட்டுகிறார்கள். அப்போ விநாயகருக்கு முன்பே முருகன் பிறந்து விட்டாரா? இது என்ன புது குழப்பம் என்று கேட்கின்றனர் சிறுவர்கள்.

நெற்றிக்கண் சிவன்

நெற்றிக்கண் சிவன்

விநாயகர் டப்பிங் தொடர்தான் என்பது அந்த பிரம்மாண்டத்திலேயே அறிந்து கொள்ளலாம். பார்வதியின் நளினம் நடனம் அற்புதம். இந்த தொடரில் நெற்றிக்கண் சிவன் தேவர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

பார்வதியின் நடிப்பு

பார்வதியின் நடிப்பு

சிவனுடன் ஆனந்த நடனமாடுவதாகட்டும், விரதமிருந்து கயிலாயம் வந்த போது சிவனை காணமுடியாமல் கோபப்பார்வை பார்ப்பதாகட்டும் நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார் நம்ம இந்தி பார்வதி. விநாயகரின் பிறப்பு இன்னும் நிகழவில்லை. இனி போக போக பார்வதியின் நடிப்பையும் நடனத்தையும் பார்க்கலாம்.

எந்த பார்வதி பெஸ்ட்

எந்த பார்வதி பெஸ்ட்

தமிழ் கடவுள் முருகனின் அழகான தமிழ் பேசுபவர் பார்வதியாக நடிக்கிறார். ஆனால் விநாயகரில் பார்வதியின் அழகு ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது. சொல்லுங்க ரசிகர்களே எந்த பார்வதியின் நடிப்புக்கு உங்க ஓட்டு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X